பொது செய்தி

இந்தியா

கொரோனா சிகிச்சைக்கு 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்'

Added : மார் 23, 2020
Share
Advertisement

புதுடில்லி,;கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' என்ற மருந்தை பயன்படுத்தும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ், நம் நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, எந்த நாட்டிலும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் பல்ராமா பார்கவா நேற்று கூறியதாவது:கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால், தேசிய அளவிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, கொரோனாவால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' என்ற மருந்தின் மூலம் சிகிச்சை அளிக்கும்படி, பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திற்கிடமானவர்களுக்கும், இந்த மருந்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

ஆனால், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் பரிந்துரை மற்றும் கண்காணிப்பின் அடிப்படையிலேயே, இந்த மருந்தை பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள், தங்கள் இஷ்டத்துக்கு இந்த மருந்தைபயன்படுத்தக் கூடாது. இவ்வாறு, அவர் கூறினார். 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' மருந்து, 1944ல் இருந்தே, மலேரியா காய்ச்சலை குணப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுவாச கோளாறுக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. 'சார்ஸ்' வைரஸ் பாதிப்பின் போதும், இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X