144 தடை உத்தரவு எதிரொலி: வௌியூர் பயணிகள் அவதி

Added : மார் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 144 தடை உத்தரவு எதிரொலி:   வௌியூர் பயணிகள் அவதி

கோவை:'கொரோனா' பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, கோவை கோட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் எண்ணிக்கை, 66 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை 144 தடையுத்தரவு அறிவிக்கப்பட்டதால், பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்கும் விதமாக, மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்க்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த வரும், 31ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ் சேவையும், 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மண்டலங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்திலும், பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. கோவை கோட்டத்தில், 2,641 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஐந்து நாட்களுக்கு முன்பு, 370 பஸ்கள் நிறுத்தப்பட்டன. படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று, 1,743 பஸ்கள் இயக்கப்பட்டன.இந்நிலையில், நேற்று மாலை தமிழகத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பஸ் ஸ்டாண்ட்களில் சொந்த ஊர் செல்வோர், அடித்து பிடித்து பஸ்களில் ஏறினர்.பஸ்கள் 66 சதவீதம் குறைப்புஅரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை கோட்டத்தில் பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ள நிலையில், ஈரோடு சென்று வரும் அரசு பஸ்களில், பயணிகள் பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். கோவை கோட்டத்தில் இயங்கும் பஸ்கள் எண்ணிக்கை, 66 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
24-மார்-202014:21:00 IST Report Abuse
RADE அரசு முதலில் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து 2 நாள் சொந்த ஊர் திரும்ப அவகாசம் குடுத்து பின்பு 144 தடை உத்தரவு இட்டு இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X