உயிரியல் கடினம்... மாணவர்கள் கவலை!

Added : மார் 23, 2020
Share
Advertisement

அன்னுார்:பிளஸ்1 பொதுத்தேர்வில் நேற்று நடந்த உயிரியல் பாட தேர்வு கடினமாக இருந்ததாக மாணவியர் தெரிவித்துள்ளனர்.பிளஸ்1 பொதுத்தேர்வு நேற்று நடந்தது. அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், அன்னூர், கெம்பநாயக்கன்பாளையம், ஆணையூர், பசூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த, 147 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.மேலும், சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கே.ஜி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி என, இரு மையங்களில் பிளஸ்1 மாணவர்களுக்கு நேற்று தேர்வு நடந்தது. நேற்று உயிரியல், வரலாறு மற்றும் வணிக கணித பாடங்களுக்கு தேர்வு நடந்தது.உயிரியல் பாடத் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு மிகக் கடினமாக இருந்ததாக புகார் தெரிவித்தனர்.வரலாறு பிரிவில், வரலாறு பாடத் தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகமாக வந்தனர். வரலாறு பாடத்தில் கேள்விகள் எளிமையாகவும் பாடத்திலிருந்தும் வந்ததாகவும், தேர்ச்சி பெறுவது எளிது என்றும் தெரிவித்தனர்,இனி பிளஸ் 1க்கு வரும் 26ம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடக்கவுள்ளன.உயிரியலில் பல கேள்விகள் பாடத்திலிருந்து கேட்கப்படாமல் பொதுவாக திறனை சோதிக்கும் படி கேட்கப்பட்டிருந்தன. இதனால், 70 மதிப்பெண்களில், 50 மதிப்பெண்கள் தான் பெற முடியும். மீதி, 20 மதிப்பெண்கள் பெறுவது மிகுந்த சிரமமாக இருக்கும்.- வான்மதிஅரசு மேல்நிலைப்பள்ளி, ஆனையூர்.உயிரியல் தேர்வில், தாவரவியல், 35 மதிப்பெண்கள், விலங்கியல், 35 மதிப்பெண்கள் என, 70 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தாவரவியல் கேள்விகள் எளிதாக இருந்தன. விலங்கியல் பாடத்திற்கான கேள்விகள் மிக கடினமாக இருந்தன.- இந்துமதி,அரசு மேல்நிலைப்பள்ளி, கெம்பநாயக்கன்பாளையம்.விலங்கியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் மற்றும் இரு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. ஆனால் மூன்று மதிப்பெண்களுக்கான கேள்விகளும், ஐந்து மதிப்பெண்களுக்கான கேள்விகளும் கடினமாக இருந்தன. பொதுவாக யோசித்து எழுதும்படி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.- சாருமதிஅரசு மேல்நிலைப்பள்ளி, கெம்பநாயக்கன்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X