பொது செய்தி

இந்தியா

'கொரோனா' சிகிச்சைக்கு பங்களா லாலு மகன் தேஜஸ்வி தாராளம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

பாட்னா:'கொரோனா' வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, தன் பங்களாவை, தனிமை மருத்துவ முகாமாக பயன்படுத்திக் கொள்ள, பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், தேஜஸ்வி யாதவ் அனுமதியளித்தார்.
கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டவர்கள், தனிமை மருத்துவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், தனிமை மருத்துவ முகாம் அமைக்க இடம் தேவைப்படுகிறது.இந்நிலையில், பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ், 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது:கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க, முதல்வர் நிவாரண நிதிக்கு, என் ஒரு மாத ஊதியத்தை வழங்குவேன். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், பாட்னாவில், எனக்கு, அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த பங்களாவை, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சைஅளிக்க, தனிமை மருத்துவ முகாமாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கொரோனா பரிசோதனை மையமாகவும், என் பங்களாவை பயன்படுத்திக் கொள்ளலாம். கொரோனாவை தடுக்க, மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைளுக்கும், முழுமையான ஆதரவு தருவேன். அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை, மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X