சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை! நகராட்சி அலுவலகம் முற்றுகை

Added : மார் 23, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:சீராகக் குடிநீர் வழங்கக் கோரி, ஜெயந்தி காலனி மக்கள், நகராட்சி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. பவானி ஆற்றிலிருந்து நாளொன்றுக்கு, 90 லட்சம் லி., தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதை சுத்தம் செய்து, மணிநகர், பழைய நகராட்சி அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், சங்கர் நகர் மற்றும் கே.கே., நகர் ஆகிய ஐந்து இடங்களில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் நிரப்பி, அவற்றிலிருந்து மக்களுக்கு வினியோகிக்கின்றனர்.சில வார்டுகளுக்கு தினமும், சில வார்டுகளுக்கு இரண்டு நாளைக்கு ஒரு முறையும், சில வார்டுகளுக்கு, நான்கு நாட்களுக்கு ஒருமுறை என, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகத்தில், பல குளறுபடிகள் உள்ளதால், நகராட்சி நிர்வாகம் சீராக குடிநீர் வினியோகம் செய்ய முடிவதில்லை.மேலும், நகரில் பல இடங்களில், குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. குறிப்பாக அன்னூர் சாலையில், இரு இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் சாலையில் ஆங்காங்கே பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளன.இதனால், கடந்த 10 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளான, ஹவுசிங் யூனிட் ஜெயந்தி காலனி மக்கள், நகராட்சி கமிஷனர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, சீராக குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்தனர்.நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் கூறுகையில், ''மின்தடை காரணமாக, மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் பம்பிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் குடிநீர் வினியோகம் பாதித்தது. உடனடியாக சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X