பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பரவலைத் தடுக்கும் முயற்சி கிருமி நாசினி ரெடி!

Added : மார் 23, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும், ஒவ்வொரு குடும்பத்துக்கும், தலா ஒரு பாட்டில் வீதம், கிருமி நாசினி வழங்கும் பணியை, பேரூராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது.
உலகையே உலுக்கி வரும் 'கொரோனா' வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 'வைரஸ் பரவலைத் தடுக்க, கைகளை பலமுறை சோப்பு போட்டு கழுவ வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இப்படியான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன.இந்நிலையில், பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளிலும் வசிக்கும், 9,000 குடும்பங்களுக்கு, தலா, 200 மி.லி., கொண்ட கிருமி நாசினியை, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி வழங்க முடிவு செய்துள்ளது.இதற்காக, முதல் கட்டமாக, 200 மி.லி., கொள்ளளவு கொண்ட, 6,000 பிளாஸ்டிக் பாட்டில்களில் கிருமி நாசினி அடைக்கப்பட்டுள்ளது. இது, இன்று (24ம் தேதி) காலை முதல் வீடு, வீடாக வினியோகம் செய்யப்பட உள்ளது.பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கதிரவமூர்த்தி கூறியதாவது:ஒவ்வொரு பாட்டில்களிலும், 'லைசால் மற்றும் பிளிச்சிங் பவுடரை' தண்ணீரில் கலந்துள்ளோம். காலை நேரத்தில் வீடு, வீடாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்க செல்லும் துாய்மை காவலர்கள், ஒவ்வொரு பாட்டிலையும், ஒவ்வொரு வீட்டுக்கு வழங்கும் பணியில் ஈடுபடுவர். இதை, 20 லிட்டர் நீரில் கலந்து சிறிய அளவிலான, 'ஸ்பிரேயர்' கொண்டு தெளிக்கலாம். இதனால் சுற்றுப்புறம் துாய்மையாகும்; கிருமிகள் பரவுவது தடைபடும்.முதல் கட்டமாக, பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சியில், 6,000 குடும்பத்துக்கும், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 3,000 குடும்பத்தாருக்கும் வழங்கவுள்ளோம்.கிருமி நாசினியை பயன்படுத்தி முடித்தவர்கள் புதியதாக கிருமி நாசினி பாட்டில்களை பேரூராட்சி அலுவலகத்தில் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சியின் இந்த சேவை பாராட்டுதற்குரியது.
அரசாங்கமே அனைத்தையும் செய்யும் காத்திருக்காமல் அனைவரும் இணைந்து செய லாற்ற வேண்டும்.ஒரு பாட்டிலின் விலை, ரூ.2.40 தான். ஆயிரக்கணக்கான பாட்டில்கள் வாங்கும் போது விலை குறையும். தன்னார்வலர்களிடம் பாட்டில்கள் பெற்று அனைத்து உள்ளாட்சிகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாடும், வீடும் நலம் பெறும்' என்றனர்.அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளும் இது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றி, களத்தில் இறங்கினால், கொலைவெறி கொண்ட கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல முற்றிலும் அழித்தொழிக்கவும் முடியும் என்பதில் மற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X