பொது செய்தி

தமிழ்நாடு

'கிரேஸ் டைம்' கொடுக்கறாங்க: கருணை உள்ளமுள்ள போலீஸ்

Added : மார் 24, 2020
Share
Advertisement

உடுமலை போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல, நண்பரை சந்தித்தேன். 'லஞ்சம் வசூலுக்கு 'கிரேஸ் டைம்' கொடுத்து, ைஹடெக்கா நடந்துக்கறாங்கனு', சொன்னாரு. என்ன நடந்ததுனு விசாரிச்சேன்.உடுமலைல போக்குவரத்து போலீஸ்காரங்க இருந்தும் பயனில்லை. எல்லா ரோடுகளும் ஆக்கிரமிப்பு கடை, வாகனங்கள் நிறுத்துமிடங்களாக மாறி கடும் போக்குவரத்து நெரிசலா இருக்கு. விபத்துகளும் ஏற்படுது. ரோட்டுல, போக்குவரத்து போலீசார பாக்க முடியல. அவங்க பார்வையெல்லாம், குறுக்கு ரோட்டுல வசூல் வேட்டையில இருக்கு.குடிபோதையில் வாகனம் ஓட்டிட்டு வர்றவங்க மடக்கி பிடிக்கறாங்க. வழக்கு போட்டு, கோர்ட்டுக்கு போனா, 10 ஆயிரம் ரூபா 'பைன்' கட்டணும்; எங்க கிட்ட, 3,500 ரூபா கொடுத்தா, வழக்கு இல்லாம விட்டர்றோம்னு, பேரம் பேசுறாங்க.பணத்தை புரட்ட, ஒரு மணி நேரம் 'கிரேஸ் டைம்' கொடுத்து, கருணை காட்டுறாங்க.போக்குவரத்து போலீஸ் 'டூட்டி' போட்டிருக்கறதே போக்குவரத்து நெரிசல குறைக்கவும், விதிமீறல கண்காணிக்கவும் தான் என்பதை எப்பே உணர்வாங்களோனு ஆதங்கப்பட்டாரு.'லேட்'டா வந்தாரு ஆபீசரு கணிவா பேசி அசத்திட்டாருவால்பாறையில 'கொரோனா' தடுப்பு நடவடிக்கை குறித்த கூட்டம், தாசில்தார் அலுவலகத்துல நடந்துச்சு. கூட்டம் சரியா காலை, 11:00 மணிக்கு துவங்கும்னு அறிவிச்சிருந்தாங்க.அதனால, எல்லா துறை அதிகாரிகளும், தனியார் எஸ்டேட் அதிகாரிக, வியாபாரிக, பொதுமக்கள் எல்லாரும் முன் கூட்டியே வந்துட்டாங்க.ஆனா, சப்-கலெக்டர் வைத்திநாதன், மதியம், 1:15 மணிக்கு தான் வந்தாரு. கூட்டத்துக்கு லேட்டா வந்தாலும், அதுக்கான காரணத்த சொல்லி, எல்லோரிடமும் கணிவா பேசினாரு. 'கொரோனா' வைரஸ் குறித்து பத்திரிகை, 'டிவி'ல நிறைய செய்தி வருது. விழிப்புணர்வு ஏற்படுற மாதிரியான செய்தியா போடுறாங்க. இந்த மாதிரியான நேரத்துல, இது, பாராட்டத்தக்கது.அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தாலும், பத்திரிகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், நாம் பாதுகாப்பாக இருந்தால் நிச்சயமா கொரோனா நம்மை நெருங்காது. இதைய எல்லாரும் புரிஞ்சுக்கணும்னு சொன்னாரு.'கொரோனா'வுக்கு ஊரடங்கு சிறப்பா நடந்தது 'சில்லிங்'பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நண்பரை சந்தித்தேன். 'என்னங்க, இவங்களுக்கு உயிர் பயமே இருக்காதா, பணம் மட்டும் சம்பாதிச்சா போதுமானு,' பல கேள்விகள் கேட்டார். என்ன, விஷயம்னு விசாரித்தோம்.தமிழகத்துல, 'கொரோனா' பரவல் அதிகரிச்சிருக்கற நேரத்துல, நிலைமையை கட்டுப்படுத்த, அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்துட்டு இருக்கு. பிரதமர் அறிவிச்ச மாதிரி, மக்கள் சுய ஊரங்கும் நடந்துச்சு. அந்த நேரத்துல, நிலைமையை பயன்படுத்தி, டாஸ்மாக் சரக்க 'சில்லிங்'கில் வித்து சம்பாதிக்க ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கு.வழக்கமான 'பிளாக்' விற்பனையை விட, கொள்ளை லாபம் வைத்து வித்தாங்க. கடை விலையை விட மூனு மடங்கு அதிக விலைக்கு வித்தாங்க. எந்தெந்த பகுதியில யார் யாருக்கு, லாபத்துல பங்கு; எந்த துறைக்கு எவ்வளவு மாமூல்னு பக்காவாக திட்டம் போட்டு, 'சில்லிங்' வியாபாரம் களைகட்டியது. மக்களும், அரசும், கொரோனா பயத்தில் அலைமோதிட்டு இருக்கும் சூழலை பயன்படுத்தி, மனசாட்சியே இல்லாம இப்படி காசு பார்க்க அலையும் ஆட்கள எல்லாம் எந்த கணக்குல சேர்க்கறது. அவங்களும் இந்த ஊருல தானே இருக்காங்க. இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையானு, புலம்பினாரு.'கொரோனா' பயமில்லாம 'குடிமகன்'கள் கொட்டம்கிணத்துக்கடவு மயானம் ரோட்டுல கூட்டம் அதிகமா இருந்துச்சு, என்ன விஷயம்னு வழித்தடத்துல இருக்கற குடியிருப்புல விசாரித்தோம்.மயானம் ரோட்டுல 'டாஸ்மாக்' கடை துவங்கிருக்காங்க. மது வியாபாரம் துாள் பறக்குது. அருகிலேயே 'பார்' இருக்கு. குடிச்சுட்டுட்டு, ரோட்டிலும், மயானத்திலும் படுத்து உருளுறாங்க.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, டாஸ்மாக் பார் மூடச்சொல்லி அரசு உத்தரவு போட்டியிருக்கு. டாஸ்மாக் கடையில சரக்கு வாங்கிட்டு, அருகில் இருக்கற மயான பகுதியில 'குடிமகன்'கள் மது குடிக்கறவுங்க. பாட்டல உடைச்சு வீசுறாங்க.'பார்' மூடியிருந்தாலும், அங்க விக்கற முட்டை, சுண்டல், மீன் வறுவல், சில்லி சிக்கன்னு எல்லா ஐடியங்களும், மயானத்துல காத்திருப்போர் அறையில வைச்சு அமோகமா விக்கறாங்க.'குடிமகன்'களுக்கு 'சைடிஸ்' அருகிலேயே கிடைப்பதால, 'பார்' மூடியிருந்தாலும் கவலையில்லாம 'குடி'க்கறாங்க. 'கொரோனா' பத்தின பயம் கொஞ்சம் கூட இல்ல. இதெல்லாம் 'சாதனை'னு நெனைக்கறாங்க. ஆனா, 'கொரோனா' பரவுச்சுனா, எல்லா மக்களும் பாதிப்பாங்க என்ற சமூக அக்கறை இல்லாம இருக்கறாங்கனு, ஆதங்கப்பட்டாங்க.எல்லா இடத்துக்கும் போகற போலீஸ் 'மாஸ்க்' போடணும்பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்துல, நிறைய பேரு மனு கொடுக்க வந்திருந்தாங்க.அங்க, பாதுகாப்பு பணியில இருந்த போலீஸ் ஒருவர், கூட்டத்த பாத்து ஆதங்கப்பட்டாரு.கூட்டமாக கூடக்கூடாது; கொரோனா வைரஸ் பரவும்; ஜாக்கிரதையாக இருங்கனு விழிப்புணர்வு ஏற்படுத்தறோம். ஆனா, மனு கொடுக்க கூட்டமா வர்றவங்க எதைய பத்தியும் கவலைப்படுறது இல்ல. அவங்க, எந்த பாதுகாப்பும் பண்ணிக்கறதில்ல. அதே மாதிரி, போராட்டம், ஆர்ப்பாட்டம்னு, மக்கள் கூடுற இடத்திலும், யாருமே தடுப்பு நடவடிக்கைய கடைபிடிக்கறதில்ல.நாங்களும் எல்லா இடத்துக்கும் சுத்தறோம். எங்களுக்கு 'மாஸ்க்', கைகளில் தேய்த்துக்கொள்ள 'சானிடைசர்' கொடுத்தா நல்லா இருக்கும். எந்த இடம்னாலும் பயமில்லாம போலாம்னு, சொன்னாரு.பணம் மட்டும் போதுமா பொதுநலன் முக்கியமில்ல'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, மக்கள் ஊரடங்கு அமல்படுத்துப்பட்டது. வியாபாரிகள் அனைவரும் கடைகளை மூடியும், தாங்களாவே முன் வந்தும், வீடுகளிலிருந்து வெளியே வராமல் முடங்கினர்.ஊரடங்கு நுாறு சதவீதம் வெற்றி பெற்றாலும், 'டாஸ்மாக்' கடை மூடியதை சாதகமாக்கி, கூடுதல் விலைக்கு, சட்ட விரோதமாக மது விற்கும் கும்பல், வழக்கம் போல், மது விற்பனையை நடத்தினாங்க. பாதுகாப்புக்காக அனைவரும் போராடும் போது, பிரச்னையோட வீரியத்த புரிஞ்சுக்காம, பணம் சம்பாதிக்கறதுல மட்டும் குறியாக இருந்தாங்க. போலீசார் சோதனை நடத்தி, 'குடிமகன்'களை துரத்தினாங்க. ஆனா, போலீஸ் நகர்ந்ததும், மறுபடியும் மது விற்பனைய துவங்கிட்டாங்க.நாராயணன் காலனி, யசோதா ராமலிங்கம் லே - அவுட், எஸ்.என்.ஆர்., லே - அவுட் பகுதியில, நிரந்தரமா போலீஸ் நியமிச்சாலும், கண்ணுல மண்ண துாவிட்டு, சரக்கு விற்பனை நடந்துச்சு.ஆளும்கட்சி, எதிர்க்கட்சி தயவுல 'காசு' பார்க்கும் கும்பல், ஒரு நாள் கூட சரக்கு விற்பனைய நிறுத்தலனு போலீசாரும், பொதுமக்களும் நொந்து போயினர்.அரசு மருத்துவமனையில 'கொரோனா' தடுப்பில்லஉடுமலை அரசு மருத்துவமனையில, ஊழியர்கள் சிலரை சந்தித்த போது, சுகாதார நடவடிக்கை மோசமா இருக்குனு புலம்பினாங்க.ஜி.எச்.,க்கு தினமும் நுாற்றுக்கணக்குல நோயாளிகள் வர்றாங்க. 'கொரோனா' வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தியிருக்காங்க.ஆனா, அரசு மருத்துவமனையில, டாக்டர், மருத்துவ பணியாளர்களுக்கு, முகக்கவசம், கையுறை, சானிடைசர் , சோப் ஆயில், கிருமி நாசினி வழங்கறதில்ல. மருத்துவமனையில, கிருமி நாசினி தெளிப்பு, கழிவுகள் அகற்றம்னு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யல.இதனால, டாக்டர், ஊழியர்க மன உளைச்சலோட இருக்காங்க. தேசிய பேரிடரா அறிவிச்சும், இது போன்ற தற்காப்பு பொருட்கள கொள்முதல் செய்து, போதுமான அளவு இருப்பு வைக்கணும், என புலம்பினாங்க.ஊராட்சி நிர்வாகத்துல அதிகாரிக 'தில்லாலங்கடி'குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன், உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர் மரத்தடியில் நின்று, தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தனர்.எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல. கஷ்டப்பட்டு தேர்தல்ல நின்னு ஜெயிச்சு வந்து, மக்கள் கிட்ட நல்ல பேர் வாங்கலாம்னு பார்த்தா, வாய்ப்பே இல்ல. ஊராட்சி கணக்கு வழக்கை கத்துக்க ஒரு வருஷத்துக்கு மேலாகும் போலிருக்கு; அதிகாரிகளும், ஊராட்சி பணியாளர்களும், நமக்கு ஏதுவும் தெரிஞ்சறக் கூடாதுன்னு தெளிவாக இருக்கிறாங்க. நுாறு நாள் வேலை திட்டத்துல ஏகப்பட்ட முறைகேடு நடக்குது. முன்பெல்லாம், ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒரு ஆபிசர் வந்து, எத்தனை பேர் வேலை செய்யறங்கான்னு கணக்கெடுத்து, அங்கிருந்தே கலெக்டர் ஆபீசுக்கு தகவல் கொடுப்பாரு. இப்பெல்லாம் எந்த அதிகாரியும் வர்றதே இல்ல.பணித்தள பொறுப்பாளர் சொல்றதுதான் கணக்கு. இந்த முறைகேட்டை கண்டுபிடிச்சு அதிகாரிங்ககிட்ட புகார் சொன்னாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கறதில்ல. இப்பவே இந்த மாதிரி நடக்குதுன்னா, உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாதப்ப, எவ்வளவு நிதிய கொள்ளை அடிச்சாங்களோனு, பேசிக்கிட்டாங்க.என்னடா இது, பொள்ளாச்சிக்கு வந்த சோதனை!பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுல நண்பர் ஒருத்தரை சந்தித்தேன். அவரு, வேதனையோட சில விஷயத்த பகிர்ந்து கொண்டார். அதில் இருந்து...பொள்ளாச்சியில பாலியல் சம்பவத்துக்கு அப்புறம், ஊருக்கு நேரம் சரியில்ல போலிருக்கு. பசுமைக்கு பொள்ளாச்சின்னு பெருமையா சொல்லிட்டு இருந்தோம். அதையெல்லாம் பாலியல் வழக்கு களங்கப்படுத்திடுச்சு. அதுக்கப்புறம், போதை பார்ட்டி நடத்தி, ஊரு பேர கெடுத்துட்டாங்க. இப்போ கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்துல விடுற வரைக்கும் வந்திருச்சு.கள்ள ரூபாய் நோட்ட மாத்தி இரட்டிப்பாக்க வந்தாங்களா; இங்க புழக்கத்துல விட வந்தாங்களன்னு சந்தேகமா இருக்கு. ஏதாவது கும்பல், இங்கே எதையாவது செஞ்சுட்டே இருக்கு. பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில எல்லா தப்புத்தண்டாவும் நடக்குது. இப்படியெல்லாம் நடக்கறத பாத்தா, நம்ம ஊர மையமா வச்சு இல்லீகல் பிசுனஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்கனு தோணுது.ஆரம்பத்திலேயே, இதையெல்லாம் கண்காணிச்சு தடுக்கலைனா, ஊரு பேரும் கெட்டு போயிடும்; போலீசால தடுக்க முடியாமலும் போயிடும். இனிமேலாவது, கண்ண மூடிட்டு இருக்காம, யாருகிட்டயும் கைநீட்டாம போலீஸ்காரங்க நேர்மையா வேல செஞ்சாங்கனா, எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்னு, ஆதங்கப்பட்டாரு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X