கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ தயார்: சீனா அறிவிப்பு

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement

பீஜிங்: உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.



latest tamil news



உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இதுவரை உலக அளவில் 16,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனாவால் இந்தியாவில் மட்டும் 368 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news



இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான அனுபவங்களை இந்நதியாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக சீனா அறிவித்தது.

இதையடுத்து கடந்த வாரம் இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம், பாகிஸ்தான், மாலதீவுகள் வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலிருந்து வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட காணொளி காட்சியில், சீனாவைச் சேர்ந்த வல்லுநர்கள், கொரோனா தடுப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்தனர். தெற்காசிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பினைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.


latest tamil news



காணொளி காட்சி குறித்து சீனநாட்டு செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் கூறுகையில், ‛ நான்கு மணி நேரம் நடந்த காணொளி காட்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை மற்றும் கண்டறிதல் குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. கொரோனா குறித்து அனைத்து தகவல்களை இந்தியாவுடன் பரிமாறி வந்துள்ளோம். சீனாவில் தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பையும் வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளோம். இந்தியா, சீனா இரண்டும், மக்கள் தொகை மிகுந்த நாடுகள் என்பதால், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் எங்களுடைய அனுபவத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ganesan - kk nagar chennai,இந்தியா
26-மார்-202018:07:36 IST Report Abuse
r ganesan சீனா நமிக்கைக்குரிய நாடு அல்ல
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
24-மார்-202010:49:57 IST Report Abuse
Nallavan Nallavan சீன உதவியை இந்தியா ஏத்துக்கலைன்னா பா சி ச பா ஜ க மத அடிப்படைவாத இனவெறி-ன்னு ஏசுவோம் .....
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
24-மார்-202010:03:44 IST Report Abuse
sridhar உதவின லட்சணம் தான் தெரியுதே. நீங்க உதவணும்னு நினைச்சா இங்கே உள்ள கம்மிகளை உங்க ஊருக்கு கூட்டுக்கோங்க. இலவச இணைப்பா திக, திமுக, வீ சி கே ஆளுங்களையும் தர்றோம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X