பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு ஓவியம், கவிதை போட்டி: வீட்டிலிருந்தபடியே 450 பேர் பங்கேற்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை, கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில், பள்ளி மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி, உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், மற்றும் பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்டம் சார்பில், வீட்டிலிருந்தே பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தியது.துாய்மை, தன் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பின்பற்றுவது குறித்து தலைப்புகள் வழங்கப்பட்டு, ஓவியம் மற்றும் கவிதைப்போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், 300 மாணவர்கள் ஓவியப்போட்டிகளிலும், 150க்கும் மேற்பட்டோர் கவிதைப்போட்டிகளிலும் பங்கேற்றுள்ளனர். மாணவர்களுக்கு 'கொரோனா' பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வாகவும் இப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் மாணவர்களும் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று படைப்புகளை 'வாட்ஸ் ஆப்' செய்துள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X