பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் தட்டுப்பாடு 'மகளிர்' தயாரிக்க கோரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலையில், பொதுமக்களுக்கு, கடைகளில் முகக்கவசம் தட்டுப்பாடு ஏற்படுவதால், மகளிர் திட்டத்தின் சார்பில் தயாரித்து வழங்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்துசெல்ல வேண்டும். கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.சுகாதாரமாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது. இருமல், சளி உள்ளவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்வதனால் நோய்த்தொற்றுகளை தவிர்க்கலாம் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும், அனைவரும், வைரஸ் பாதிப்பு தடுப்பு செயல்பாடாக தற்போது முகக்கவசம் அணிய துவங்கிவிட்டனர். திருப்பூர் மாவட்ட அளவில், மகளிர் திட்டத்தின் சார்பில் இவை தயாரிக்கும் பணிகள் நடக்கிறது.ஆனால், உடுமலை உட்பட ஒன்றிய அளவில் முகக்கவசம் தயாரிப்பு இல்லை. தற்போது உடுமலை சுற்றுப்பகுதியில், மருந்தகங்களில் இதன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் சில வணிக கடைகளில், தரமில்லாத கவசங்கள் மற்றும் விலை ஏற்றத்துடனும் விற்க துவங்கியுள்ளனர். பொதுமக்களும் பாதிப்புக்கு அச்சப்பட்டு, அவற்றை வாங்கிச்செல்கின்றனர்.இதனை தவிர்க்க, அரசின் சார்பில் மகளிர் திட்டத்தின் மூலம் அந்தந்த வட்டாரங்களில் போதியளவு முகக்கவசம் தயாரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X