பொது செய்தி

தமிழ்நாடு

கேரள தொழிலாளர்கள் வருகை தடுப்பு நடவடிக்கைகளுக்கு சவால்

Added : மார் 24, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் உள்ள ஆலைகளுக்கு, அரசின் உத்தரவை மீறி கேரள தொழிலாளர்களை அழைத்து வருவது தொடர்கிறது.கிணத்துக்கடவு, கோவில்பாளையம் சுற்றுப்பகுதியில் பல்வேறு ஆலைகள், தொழிற்சாலைகள் இயங்குகின்றன.ஆலைகளில் பணியாற்ற, நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கேரளாவில் இருந்து தினமும் அழைத்து வரப்படுகின்றனர். இதற்கு, சொந்த பயன்பாட்டுக்ககென பதிவு செய்யப்பட்ட ஜீப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. கேரள எல்லைகள் அடைக்கப்பட்ட பிறகும், இந்த ஆலைகளுக்கு கேரளாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருகின்றன.இது, அரசின் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்கே சவால் விடும் செயலாக உள்ளது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் கேரள தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி வந்த நிறுவனங்கள், அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் மற்றும் ஒன்றிய அதிகாரிகளின் அழுத்தத்தால், கேரள தொழிலாளர்களை தற்காலிக பணி நிறுத்தம் செய்துள்ளன.நோய் பரவல் அபாயத்தை தவிர்க்க வேண்டி, கிணத்துக்கடவு, கோவில்பாளையம் பகுதி தொழிற்சாலைகளிலும் கேரள தொழிலாளர்கள் அழைத்து வரப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.சம்மந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் அதற்கான நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X