பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' வைரஸ் தடுப்பு பணி :தூய்மை பணியாளருக்கு உபகரணம்

Added : மார் 24, 2020
Share
Advertisement
 'கொரோனா' வைரஸ் தடுப்பு பணி :தூய்மை பணியாளருக்கு உபகரணம்

வால்பாறை:வால்பாறையில் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.பிரதமரின் உத்தரவிற்கு இணங்க ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நேற்று முன் தினம், வால்பாறை நகராட்சி துாய்மைப் பணியாளர்கள் காலை முதல், மாலை வரை நகரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், துாய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, நகராட்சி சார்பில் நேற்று பாதுகாப்பு கவச உடைகள், கிருமிநாசினி தெளிக்க தனி வாகனம், ஜெனரேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.வால்பாறை நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. வால்பாறை மலைப்பகுதியில் யாரும் பாதிக்க கூடாது என்பதற்காக நகராட்சி பணியாளர்கள் இரவு, பகலாக துாய்மைப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொதுமக்கள், ஒரு நாளைக்கு, 10க்கும் மேற்பட்ட முறை கையை சோப்பால் நன்றாக கழுவ வேண்டும். வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக, வெளிமாநிலத்திற்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் வந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொரோனாவை தடுக்க நகராட்சியோடு இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X