பொது செய்தி

தமிழ்நாடு

கை கழுவிய பின் பத்திரப்பதிவு :சார்பதிவாளர் அலுவலகத்தில் அமல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு முன்பாக, கைகளை நன்றாக கழுவிய பின் ரேகை பதிவு எடுக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலங்களில், அந்த அந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மூலம் அலுவலகத்தின் உள்ளேயும், வெளியேயும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.அலுவலகத்தில், சார்பதிவாளர் மற்றும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து கொண்டனர். அலுவலகத்திற்குள் பத்திர பதிவுக்காக வருபவர்களின் கைகளை கிருமி நாசினி கொண்டு கை கழுவ செய்து, பின் புகைப்படம் மற்றும் ரேகை பதிவு ஸ்கேன் செய்யப்பட்டது.கைரேகை எடுக்கும் முன்பாக டிஸ்யூ பேப்பரில் கிருமி நாசினியை கொண்டு சுத்தமாக துடைக்கப்பட்ட பின், ரேகை பதிவு எடுக்கப்பட்டது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசு அலுவலங்களுக்கு வரும் பொதுமக்களின் கைகளை கழுவிய பின், உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, கை கழுவும் பேசன், தண்ணீர், கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது.மேலும், கை கழுவ வேண்டியது குறித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X