பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே டிக்கெட் கவுன்டர்கள் மூடல்: முன்பதிவு ரத்துக்கு அவகாசம் நீட்டிப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கவுன்டர்கள் மூடப்படும்; முன்பதிவு செய்துள்ள டிக்கெட்டுகளை ரத்து செய்ய, கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.நாடு முழுக்க கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நேற்று முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க, ரயில்வே ஸ்டேஷன்களில், முன்பதிவு கவுன்டர்கள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஏற்கனவே ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்துள்ளவர்கள், முன்பதிவை ரத்து செய்ய கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, பயண தேதியில் இருந்து மூன்று நாட்கள்; ரயில் நேரத்தில் இருந்து, 72 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை ரத்து செய்யலாம்.இந்த அவகாசம், தற்போதுள்ள அசாதாரண சூழலை கணக்கில் கொண்டு, மூன்று மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும், 31ம் தேதி வரை பயணிகள் டிக்கெட் ரத்து கோரி, ரயில்வே ஸ்டேஷன்களுக்கு வர வேண்டாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதே போல், இக்காலக்கட்டத்தில், புதிய டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்ய முடியாது.பயணிகள் ரயில் டிக்கெட்டை 'ஆன்லைன்' மூலம் பெறும் யு.டி.எஸ்., செயலியும் வரும், 31ம் தேதி வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X