பொது செய்தி

தமிழ்நாடு

குழாய் உடைந்தது ரோட்டில் வெள்ளம்: வீணாகிறது சுத்திகரிக்கப்பட்ட நீர்

Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 குழாய் உடைந்தது ரோட்டில் வெள்ளம்: வீணாகிறது சுத்திகரிக்கப்பட்ட நீர்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, பிரதான குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், 295 கிராமங்களுக்கான குடிநீர் திட்ட பிரதான குழாய் செல்கிறது. இந்த குழாய் ரங்கசமுத்திரம் அருகே பல நாட்களுக்கு முன் உடைந்தது.குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், குடிநீர் விரயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ரங்கசமுத்திரம் அருகே குழாய் உடைந்து வீணாக செல்லும் குடிநீரை, சாக்கடை கால்வாய்க்குள் செல்லும் வகையில், தற்காலிக வடிகால் வெட்டியுள்ளனர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.தண்ணீர் பற்றாக்குறை உள்ள சூழலில், அதிகாரிகளின் அலட்சியத்தால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாவதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது:அணைகளின் நீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பல கிராமங்களில் மக்கள் குடிநீர் கிடைக்காமல், காலி குடங்களுடன் அலைமோதுகின்றனர்.வஞ்சியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், குடிநீர் வினியோகம் செய்து, 10 நாட்களுக்கு மேலாகிறது. ஆனால், குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாகியும் சரி செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டவில்லை. சிறு உடைப்பாக இருந்த போதே, கண்காணித்து சீரமைத்திருந்தால், தண்ணீர் விரயம் தவிர்க்கப்பட்டிருக்கும். அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி தண்ணீர் விரயமாகுவதை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
24-மார்-202007:43:01 IST Report Abuse
Darmavan பொறுப்பற்ற அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X