பொது செய்தி

தமிழ்நாடு

வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை: 'கொரோனா' தடுப்பு நடவடிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:''பொள்ளாச்சி பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு வரும், 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது,'' என, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் தெரிவித்தார்.பொள்ளாச்சி பகுதியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நகைக்கடைகள் நேற்று மூன்றாவது நாளாக மூடப்பட்டன. துணிக்கடைகளும் நேற்று மதியத்துக்கு மேல் மூடப்பட்டன. பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பொதுமக்கள் அதிகம் கூடும், 10க்கு மேல் பணியாளர்கள் பணியாற்றும் வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், ஜவுளி, நகைக்கடைகள், தங்கும் விடுதிகள், கூட்ட அரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.வரும், 31ம் தேதி வரை அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.அத்தியவாசிய மற்றும் மருத்துவ பொருட்கள் வினியோகிக்கும் வியாபாரிகள், அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்படலாம். இவ்வாறு, அவர் கூறினார்.கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் நார் சார்ந்த பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கவுதமன் கூறுகையில், ''தமிழக அரசு, இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.எனவே, தென்னை நார் தொழிற்சாலைகள் அடுத்த உத்தரவு வரும் வரை உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X