பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி 'மாஸ்க்' தயாரிப்பு பணியாளருக்கு வினியோகம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில் பணியாளர்களுக்காக, 'மாஸ்க்' தயாரித்து வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி நகராட்சியில், கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.விழிப்புணர்வு நடவடிக்கை மட்டுமல்லாமல், சுகாதாரம் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில், துாய்மை பணியாளர்கள், 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நகராட்சி துாய்மை பணியாளர்கள் வசதிக்காக 'மாஸ்க்' வழங்கப்படுகிறது. 'மாஸ்க்' தற்போது தட்டுப்பாடு உள்ளதால், நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் தயாரித்து பணியாளர்களுக்கு வழங்குகின்றனர்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:துாய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாஸ்க் (முகக்கவசம்) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், 'டிஷ்யு பேப்பர்', மற்றும் 'நான் ஓவன் பேக் பேப்பர்' பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. பேப்பர் மடிக்கப்பட்டு, இரண்டு பக்கமும் ரப்பர் பேன்ட் வைத்து பின் செய்து, முகக்கவசமாக பயன்படுத்தப்படுகிறது.தினமும், தேவைக்கு ஏற்ப 'மாஸ்க்' தயார் செய்து பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X