பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகத்தில் விழிப்புணர்வு மக்கள் கைகளை கழுவ நடவடிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்துக்கு வரும் மக்களிடம், 'கொரோனா' தடுப்புக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.பொள்ளாச்சி பகுதியில், கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று மனு கொடுக்க வந்த மக்கள், அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் மனுக்களை போடுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மனு கொடுக்க வந்த மக்களை, கைகளை கழுவிச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.அதிகாரிகள் கூறுகையில், 'சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் மக்களிடம், கை கழுவும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, மக்கள் கை கழுவுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,' என்றனர்.சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு பெறாததால் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்துக்கு வரும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளை சந்திக்க வரும் மக்களிடம், 'ேஹண்ட் சானிடைசர்' கொடுத்து கைகளில் தடவிய பின், உள்ளே செல்ல அனுமதிக்கும் நடைமுறைகளை பின்பற்றுகின்றனர்.பொள்ளாச்சி அருகே கோமங்கலம் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் வரும் மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X