பொது செய்தி

தமிழ்நாடு

பழைய பஸ் ஸ்டாண்டில் கை கழுவ குழாய் அமைப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், மக்களின் நலனுக்காக கை கழுவும் திட்டத்துக்காக குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.பொள்ளாச்சி நகரில், 'கொரோனா' வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பஸ் ஸ்டாண்ட் துாய்மை செய்தல், மக்களிடம் விழிப்புணர்வு என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.மேலும், பல்வேறு அமைப்புகளும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், பொள்ளாச்சி கிளை தமிழக ைஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன், பொள்ளாச்சி வட்டார சமையல் பாத்திரம் மற்றும் பி.வி.சி., பந்தல் உரிமையாளர்கள் நலச்சங்சகம் சார்பில் கைகழுவும் திட்டத்துக்காக, பழைய பஸ் ஸ்டாண்டில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.கைகளை கழுவி சுத்தப்படுத்தி துாய்மையாக வைத்திருக்கும் வகையில், பஸ் ஸ்டாண்டில் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.'பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் வசதிக்காக நகராட்சி மூலம் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் கை கழுவுதற்கான வசதிகளை செய்துள்ளது.பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X