பொது செய்தி

தமிழ்நாடு

சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறை அருகே சிறுத்தை நடமாடியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் குரூப் டீ எஸ்டேட். இந்த எஸ்டேட் பகுதியை சுற்றிலுள்ள தோணிமுடி, முத்துமுடி, தாய்முடி, கெஜமுடி உள்ளிட்ட எஸ்டேட்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், இந்தப்பகுதியில் நான்கு குழந்தைகள் சிறுத்தையின் பசிக்கு இறையாகியுள்ளன. இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தனர். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின், முடீஸ் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. முடீஸ் பஜார் பகுதியில் இறைச்சிக்கடை அருகே சிறுத்தை ஒன்று கடந்த ஒரு வாரமாக நடமாடுவதை கண்டு இப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிறுத்தை நடமாட்டம், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்கள், வியாபாரிகள் தங்களது கடை மற்றும் வீடுகளில் வெளியாகும் இறைச்சிக்கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.வீடுகளில் வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிறுத்தைக்கு பிடித்தமான நாய் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.குழந்தைகளை மாலை நேரத்தில் வெளியில் விளையாட அனுமதிக்க கூடாது. சிறுத்தை நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X