தமிழ்நாடு

சொன்னா... கேளுங்க! அடிக்கடி கை கழுவுவது மிகவும் அவசியம்: இன்னும், விழிப்புணர்வு வராத வேதனை

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020
Share
Advertisement
 சொன்னா... கேளுங்க! அடிக்கடி கை கழுவுவது மிகவும் அவசியம்: இன்னும், விழிப்புணர்வு வராத வேதனை

திருப்பூர்:பஸ் ஸ்டாண்ட், விளையாட்டு மைதானங்களில், சோப்பு போட்டு கை கழுவும் வகையில், தற்காலிக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.கொரோனா பரவலை தடுக்க ஒரே முடிவு, பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கு, சமூக விலகலை கடைபிடிக்க, மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியும், சிலர், பஸ் ஸ்டாண்டில் ஒன்று கூடி நிற்பதும், விளையாட்டு மைதானங்களில் ஒன்றாக 'வாங்கிங்' செல்வதையும் காண முடிகிறது.
இது, மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமையை காட்டுகிறது. டீ கடைகள், பேக்கரிகள், உணவகங்களுக்கு வருவோர், உடனே அங்கிருந்து கிளம்புவதும் கிடையாது. மாறாக, அரட்டை அடிப்பதையும், சிகரெட் பிடிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இங்கும், சுகாதாரம் பேணப்படுவதில்லை.பொதுமக்களின் இத்தகைய போக்கை தடுக்கவும் முடிவதில்லை. எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அதற்கு, பஸ் ஸ்டாண்ட், முக்கிய பஸ் ஸ்டாப், விளையாட்டு மைதானங்களில், சானிடைசர் மற்றும் சோப்பு போட்டு கை கழுவும் வகையில், தற்காலிக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.இது குறித்து, சுகாதாரத்துறையினர் கூறியதாவது:'ஏன் கை கழுவ வேண்டும்?' என்ற நிலையிலேயே மக்கள் உள்ளனர். பலர், சற்று நேரமாவது கைகளை சோப்புப் போட்டு ஊறவைத்த பின்னர் கழுவுவதும் கிடையாது.சாப்பிடும் முன் சோப்பு போட்டுக் கைகளைக் கழுவுவதன் மூலம் வயிற்றுப் போக்கையும் நிமோனியாவையும் தடுக்கலாம்.
மேலும், வைரஸ் காய்ச்சல் போன்றவை பரவாமலும் தடுக்கலாம். தற்போது, கொரோனா பரவலை தடுக்கவும் இதே வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.சோப் எளிதில் கிடைக்கக் கூடிய பொருள். அதிக செலவு செய்ய வேண்டியதில்லை. இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாக்கப்படுவர்.அன்றாட, அவசர உலகில் கைகளை சோப்பு போட்டுக் கழுவுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் என்று தோன்றலாம். ஆனால், அது நம் வாழ்க்கையில் நோய்களிலிருந்து பாதுகாப்பைத் தரும்.இவ்வாறு, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X