தமிழ்நாடு

பனை பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பு; பனைத்தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை தேவை

Added : மார் 24, 2020
Share
Advertisement
பனை பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பு; பனைத்தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை தேவை

சாயல்குடி: சாயல்குடி, கடலாடி, சிக்கல், மேலக்கிடாரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டார கிராமங்களில் 1 கோடிக்கும் அதிகமான பனைமரங்களை நம்பி ஆயிரக்கணக்கான பனைத்தொழிலாளர்கள் வாழ்கின்றனர். தற்போது பதனீர் சீசன் ஆரம்பித்து விட்டதால், பதனீர் இறக்குவதற்காக காலை, மாலை நேரங்களில் பனைமரத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

பனை மரக்காடுகள் நிறைந்த பகுதியில் தங்கியிருந்து கருப்பட்டி காய்ச்சுவதற்காக சொந்த ஊரில் இருந்து பிரிந்து வந்து காட்டுப்பகுதியில் ஓலைக்குடிசை அமைத்து வசிக்கின்றனர். காலையில் கிடைக்கும் பதனீரைக் கொண்டு காலை 8:00 முதல் 11:00 மணிவரை கருப்பட்டி காய்ச்சும் பணியை பனைமரத் தொழிலாளர்களின் குடும்ப பெண்கள் செய்கின்றனர்.

பனைமரத்தின் அனைத்து பொருட்களும் பயன் தருவதால், கற்பகத்தருவாக விளங்குகிறது. நான்கு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துப் போனது. கடந்தாண்டு இறுதியில் பெய்த தொடர் பருவ மழையால், விவசாயத்தை போல பனை மரங்களிலும் பனை பொருட்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.

சாயல்குடியை சேர்ந்த பனைத்தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் எம்.பெத்தராஜ் கூறியதாவது: சித்த மருத்துவத்தில் பனங்கருப்பட்டி முக்கிய இடத்தை வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் கருப்பட்டியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆண்டிற்கு 6 மாதங்களுக்கு பனைத்தொழில் சிறப்பாக இப்பகுதியில் நடக்கும். அரசின் பனைவெல்ல கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் பனை மரங்களை பாதுகாப்பதற்கும், மீண்டும் பனை மரங்களை வளர்த்து, உற்பத்தி பெருக்கத்திற்கும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை.

அரசியல் குறுக்கீடுகளும், தலையீடுகளும் இருப்பதால் உண்மையான பனைமரத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், மானிய உபகரணப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. முறையான பனை தொழிலாளர்களை கிராமங்கள் தோறும் கணக்கீடு செய்து வாரியம் சார்பில் பனை மர தொழில் உபகரணங்கள், மானிய உதவிகள் கிடைக்க ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனம் நடவடிக்கை எடுக்கவில்லை.

லாபம் ஒன்றை மட்டுமே அரசு குறிக்கோளாக கொள்ளாமல், இனி வருங்காலங்களில் பனைமரத் தொழிலாளர் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும். பனைவெல்ல கூட்டுறவு சங்கத்தின் அதிகாரிகள், நேரடியாக சென்று நலிவடைந்த பனைத்தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X