பொது செய்தி

தமிழ்நாடு

நிதி நெருக்கடியில் மகளிர் குழுவினர்: நிறுவனங்கள் சலுகை காட்டுமா?

Added : மார் 24, 2020
Share
Advertisement

அவிநாசி:திருப்பூரில் தொழில் நிறுவனங்கள், மூடப்பட்டுள்ளதால், வங்கி மற்றும் 'மைக்ரோ' நிதி நிறுவனங்கள் மூலம், சுழல்நிதி பெற்று, தங்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்து வரும் பெண் தொழிலாளர்கள், பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.திருப்பூர், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட மாவட்டம் முழுக்க, பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்துள்ளன. இவற்றில், ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.இவர்கள், தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த, வங்கி மற்றும் 'மைக்ரோ' நிதி நிறுவனங்கள் மூலம் சுழல்நிதி பெற்று, பண தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். வங்கிக்கடன் தவணை செலுத்த, தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை செலவிடுகின்றனர்.தற்போது, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான நிறுவனங்களில், விடுமுறை நாட்களில் சம்பளம் வழங்கப்படமாட்டாது என, கூறப்பட்டிருக்கிறது.இதனால், வங்கிக்கடன் சார்ந்த சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண் தொழிலாளர்கள், தங்களின் கடன் தவணை உள்ளிட்ட பொருளாதார நிலையை சீர்படுத்தி கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.எனவே, கொரோனா பாதிப்பு முடியும் வரை, வங்கிக்கடன் மற்றும் சுழல்நிதி கடனுக்குரிய தவணை செலுத்துவதற்காக, கால அவகாசத்தை நீடிக்க வேண்டுமென, அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X