பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுக்க ராமேஸ்வரத்தில் இயற்கை கிருமி நாசினி தெளிப்பு

Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ராமேஸ்வரம் : கொரோனாவை தடுக்க ராமேஸ்வரத்தில் த.மா.கா.,வினர் வேப்பிலை, மஞ்சள் கலந்த கிருமி நாசினி நீர் தெளித்து பொது மக்களை கை கழுவ செய்தனர்.

கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை கிருமி நாசினி மருந்து பெரும்பாலான பகுதியில் தெளிக்க முடியாத நிலையில், பொதுமக்கள் பலர் தாமாக முன்வந்து வீடு, தெருக்களில் வேப்பிலை, மஞ்சள் கலந்த இயற்கை கிருமி நாசினிநீரை தெளித்து வருகின்றனர்.

இதனைதொடர்ந்து ராமேஸ்வரம் கோயில் நான்கு ரதவீதி, திட்டகுடி சாலையில் த.மா.கா., வினர் இயற்கை கிருமி நாசினி வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை தெளித்தும், சாலையில் சென்ற பொதுமக்களுக்கு இந்நீரை வழங்கி கைகளை சுத்தம் செய்ய வலியுறுத்தினர்.

இதில் த.மா.கா., ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் முகேஷ்குமார், மண்டபம் வட்டார தலைவர் சுரேஷ்குமார், ராமேஸ்வரம் நகர் தலைவர் ராமகிருஷ்ணன், ஆர்.பி. அருண், பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameswaram Municipality - Rameswaram,இந்தியா
24-மார்-202013:19:08 IST Report Abuse
Rameswaram Municipality இராமேஸ்வரம் : நகராட்சி அலுவலகத்தில், தேவையில்லாமல் மக்கள் வர தடை செய்யப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தில், கொரோனா தாக்குதல தலை தூக்கியுள்ள நிலையில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூட்டம் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி நகராட்சி மைய அலுவலகத்துக்குள், தேவையில்லாமல் வருவோரை கட்டுப்படுத்தும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து நகராட்சி அலுவலக நுழைவாயிலில் மக்கள் குறைகளை தெரிவிக்க மனு போடும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கைகளை கழுவிய பிறகே, மனு போடவும் மக்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. இதற்கென இரு பணியாளர்கள் நியமிக்கப்ட்டுள்ளனர். வரி செலுத்த வரும் மக்களையும், கைகளை கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகினறனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X