பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 தேர்வு அறையில் கிருமி நாசினி தெளிப்பு; கை கழுவிய பின் அனுமதி

Added : மார் 24, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேர்வு அறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாணவர்கள் சோப்பு போட்டு கை கழுவிய பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பத்தாம்வகுப்பு தேர்வை ஏப்., மாதத்திற்கு தள்ளி வைத்தது.பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுமுடியும் நிலையில் உள்ளது. இன்று (மார்ச் 24) நடக்கும் தேர்வுடன் பிளஸ் 2 தேர்வுகள் நிறைவுபெறுகிறது. பிளஸ் 1க்கு நேற்று திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தேர்வு எழுதும் அறைகள் முழுவதுமாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தேர்வு எழுத வந்த அனைத்து மாணவர்களும் சோப்பு போட்டு கைகழுவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கைகளை கழுவிய பிறகே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.பிளஸ் 1 தேர்வு மார்ச் 26ல் முடிவடைகிறது. அதுவரை முன்னேற்பாடுகளுடன் தேர்வுகள் நடை பெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X