பொது செய்தி

தமிழ்நாடு

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்: மக்கள் ஒத்துழைக்க கலெக்டர் வேண்டுகோள்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020
Share
Advertisement
 அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்:  மக்கள் ஒத்துழைக்க கலெக்டர் வேண்டுகோள்

கடலுார்: கொரோனா தடுப்பு நடவடிக்கையால் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும், மக்கள் அச்சப்படதேவையில்லை என, கலெக்டர் அன்புச்செல்வன் உறுதி அளித்துள்ளார்.

கடலுார் மாவட்டத்தில் ஊரடங்கு முடிந்து நேற்று காலை வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டு, மக்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட துவங்கினர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று மாலை 6:00 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து முதல்வர் உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்களா மளிகை, காய்கறி, பால் உள்ளிட்ட கடைகள் திறந்திருக்கும் என தெரிவித்திருந்தனர்.இருந்தும் கடைகள் அனைத்தும் மூடப்படும் என அச்சமடைந்த பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளில் குவிய துவங்கினர். கடலுார் மாவட்டத்தில் மளிகைக்கடை, காய்கறிக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளிலுனாம் நேற்று பகல் 12:00 மணிக்குமேல் மக்கள் கூட்டம் அலைமோதியது.கலெக்டர் அன்புச்செல்வம் கூறுகையில், '' 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் செய்யும். பொதுமக்கள் அவசரப்பட்டு அத்தியவசிய பொருட்களை அளவுக்கு அதிகமாக வாங்கி குவிக்க வேண்டாம்.பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. கடைகளில் அதிக அளவில் கூட்டமாக கூட வேண்டாம். பொதுமக்கள் அமைதி காத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என, கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடலுார் நகரில் காலையில் திறந்திருந்த ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன் நேரிடியாக சென்று அறிவுறுத்தினார். அதையடுத்து நகைக்கடைகள், ஜவுளி கடைகள் மூட்டப்பட்டன.மளிகை மற்றும் காய்கறி கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கும் சென்று அரசு அதிகாரிகள் கூட்டத்தை சேர்க்க வேண்டாம் என, அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X