பொது செய்தி

தமிழ்நாடு

கொம்மந்தான்மேடு தரைபாலம்: அதிகாரிகள் ஆய்வு

Added : மார் 24, 2020
Share
Advertisement
 கொம்மந்தான்மேடு தரைபாலம்: அதிகாரிகள் ஆய்வு

கடலுார்: கடலுார் கொம்மந்தான்மேடு தரைப்பாலத்தை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதன்பேரில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.'கொரோனா' நோய் பாதிப்பை கட்டுப்படுத்த புதுச்சேரியில் வெளிமாநில நான்கு சக்கர வாகனங்கள் நுழைய நேற்று முதல் வரும் 31ம் தேதி, வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நுழையாமல் இருக்க எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள கொம்மந்தான்மேடு தரைப்பாலம் வழியாக தமிழக பகுதிக்கும், தமிழக பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த வழியாக புதுச்சேரிக்கும் சென்று வருவதாக புகார் எழுந்தது.'கொரோனா' நோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் இந்த வழியாக செல்வதை தடுக்கும் விதமாக கடலுார் நகராட்சிக்குட்பட்ட கொம்மந்தான்மேடு சாலையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, நகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, டி.எஸ்.பி., சாந்தி ஆகியோர் நேற்று கொம்மந்தான்மேடு சென்று சாலையை மூட தேவையான முன்னேற்பாடுகளை செய்து, ஆலோசனை நடத்தினர்.பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், தாரகேஸ்வரி உடனிருந்தனர். இதன்படி இன்று முதல் கொமந்த்தான்மேடு பாலம் மூடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X