சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் சில்மிஷம் 10 பேரிடம் விசாரணை

Added : மார் 24, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலியை சேர்ந்தவர் சூர்யா,28. இவர் வழிப்பறி வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து தண்டனை காலம் முடிந்து வெளியே வந்துள்ளார்.இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்னையை சேர்ந்த பத்து பேர் டி.என்.02.பி.ஏ.5346 எண்ணுள்ள ஆட்டோவில் வந்துள்ளனர். இவர்களில் சிலர் சூர்யா வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சூர்யா மற்றும் பத்துபேரையும் தேடி சென்றனர். போலீசார் வருவதை அறிந்த அவர்கள் அங்கிருந்து தப்பி, கடலூர் அடுத்த கே.என்.பேட்டைக்கு சென்றனர். இதையறிந்த நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் கே.என்.பேட்டையில் காத்திருந்திருந்தனர்.பின் ஆட்டோவில் வந்த சென்னையை சேர்ந்த பத்து பேரை பிடித்து வந்து வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தபட்டுள்ளனரா என விசாரித்து வருகின்றனர். மேலும் சூர்யாவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X