சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கள் விற்றவர் கைது

நரிக்குடி: சிவகாசி வெள்ளூரை சேர்ந்தவர் முனியாண்டி 32. அ.முக்குளம் பஸ்ஸ்டாப் அருகே கள் விற்றுக் கொண்டிருந்தார். எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையில் போலீசார் கேனிலிருந்த 5 லி., கள் பறிமுதல் செய்து முனியாண்டியை கைது செய்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை மணி நகரம் பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பதாக டவுண் போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சோதனையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த கனகராஜை 35, கைது செய்து 144 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தீயில் கரும்புகள் சேதம்

நரிக்குடி:நரிக்குடி வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி 37. இவர் 4 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்தார். விளைந்து பலன் கொடுக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததில் கரும்புகள் எரிந்து சேதமாகின. நரிக்குடி எஸ்.ஐ., கமல் விசாரிக்கிறார்.

ஊரடங்கில் மதுவிற்றவர் கைது

வத்திராயிருப்பு:கொரோனா ஊரடங்கு நாளான நேற்று முன்தினம் மாவூத்து பகுதியில் வத்திராயிருப்பு எஸ்.ஐ.,செல்லபாண்டியன் ரோந்து சுற்றி வந்தார். ரெங்கப்பநாயக்கர்பட்டி குருநாதன் 39, விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்தார். அவரை கைது செய்தபோலீசார் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பட்டாசு வைத்திருந்த இருவர் கைது

சிவகாசி: சிவகாசி சாத்துார் ரோட்டில் சிவகாமிபுரம் காலனியில் கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அனுமதியின்றி பட்டாசு பண்டல்கள் வைத்திருந்த ராஜசேகரன் 32, ஆறுமுகச்சாமி 44, ஆகியோரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்; கைது 1

சாத்துார்: சாத்துார் குருவிங்காபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் 28. பெரிய கொல்லபட்டி விலக்கில் மது விற்றார். ரோந்து சென்ற போலீசார் சோதனை செய்தபோது 180 மி.லி., அளவுள்ள 50 பிராந்தி பாட்டில் இருப்பது தெரியவந்தது. பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கல்லுாரி மாணவி மாயம்

சாத்துார்: சாத்துார் முத்தார் பட்டியை சேர்ந்த 19 வயது பெண் அருப்புக்கோட்டை தனியார் கல்லுாரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த மார்ச் 17ல் கல்லுாரி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தார். மார்ச் 19ல் அக்கா வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X