பொது செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி.,யில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement
 என்.எல்.சி.,யில்  கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

நெய்வேலி: என்.எல்.சி.,நிறுவனத்தின் சார்பில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட என்.எல்.சி., சேர்மன் ராகேஷ்குமார் ஆலோசனையின் பேரில் மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமனின் நேரடி கண்காணிப்பில் நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள், அலுவலக பகுதிகள், மருத்துவமனை மட்டுமின்றி நெய்வேலி நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.நெய்வேலி நகர எல்லைகளுக்குள் கார்கள்,பேருந்துகள் மற்றும் இருசக்கரவாகனங்களில் வரும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை தெர்மல் ஸ்கேனர் வாயிலாக சிறப்பு கண்காணிப்புக்குழுவினர் பரிசோதிக்கின்றனர். நெய்வேலி நகத்தில் வசிக்கும் அனைவரது வீடுகளிலும் ஒவ்வொரு வீடாக சென்று வைரஸ் தொற்று அல்லது அதீத காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தாலும்கூட அவர்களை தனிமைப்படுத்தி சிறப்பு 'கொரோனா ஆம்புலன்ஸ்' மூலம் என்.எல்.சி., மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். என்.எல்.சி.,மருத்துவமனையில் 150க்கும் மேற்பட்ட சிறப்பு தனியறைகள் தயார் நிலையில் உள்ளது.வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள நெய்வேலியை சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் அவர்களை என்.எல்.சி.,பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதால் என்.எல்.சி.,நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் மற்றும் அலுவலக பகுதிகளில்பணியாற்றும் பணியாளர்களின் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு டிவிஷனில் 50 பேர்கள் பணியாற்றும் இடத்தில் சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 10 பேர் வந்தால் போதுமானது. மீதமுள்ளவர்கள் அவரவர்களது வீட்டிலிருந்தவாறு உயரதிகாரி கொடுத்த பணியினைசெய்து முடிக்க வேண்டும் என அவசர உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நெய்வேலி நகருக்குள் வரும் அனைவருக்கும் சானிட்டைசர் போன்ற வைரஸ் பரவல் தடுப்புக்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X