பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் ஊரடங்கு: 300 டன் மீன்கள் தேக்கம்: கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் பரபரப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

கடலுார்: கொரோனா ஊரடங்கு காரணமாக கடலுாரில் 2 நாட்களாக தேக்கமடைந்த 300 டன் மீன்களை, நேற்று வெளி மாநில வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கு நடத்தப்பட்டது. அதனை முன்னிட்டு, கடலுார் மாவட்ட மீனவர்கள் கடந்த 21ம் தேதி மற்றும் 22ம் தேதி இரண்டு நாட்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. இதனால், கடலுார் துறைமுக மீன்பிடி துறைமுகம் சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி பகுதிகளில், மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஊரடங்கின்போது, போக்குவரத்து இல்லாமல், கேரள உள்ளிட்ட வெளிமாநில மீன் வியாபாரிகள் வரவில்லை. இதனால், ஊரடங்கிற்கு முன்பு பிடித்து வரப்பட்ட சுமார் 300 டன் எடையுள்ள சூறை, திருக்கை உள்ளிட்ட மீன்கள் இரண்டு நாட்களாக தேக்கமடைந்திருந்தன.இதனால் மீன் வியாபாரிகள் கவலையில் இருந்த நிலையில், நேற்று கேரள மாநில மீன் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி சென்றனர். கேரள எல்லைகள் அடைக்கப்பட்டதால், மீன்களுக்கு விலை ஏதும் வைக்காமல், அங்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டால் மட்டுமே விலை தருவதாக வியபாரிகள் தெரிவித்தனர். மீன்கள் வைத்திருந்தால் வீணாகும் என்பதால், மீனவர்களும் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X