பொது செய்தி

தமிழ்நாடு

வெளி மாநில பஸ்கள் நிறுத்தம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கடலுார்: 'கொரோனா' பாதிப்பு எதிரொலியாக, கடலுாரில் இருந்து கேரளா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் நிறுத்தப்பட்டன.

'கொரோனா பாதிப்பால், பொழுது போக்கு இடங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியூர் பயணங்களை தவிர்த்து வருகின்றனர்.அதனால், பஸ்களில் கூட்டம் குறைந்துள்ளதால், கடலுார் மாவட்டத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டுவரும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு உள்ள கேரளா, கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் திருப்பதிக்கு இயக்கப்பட்ட பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று புதுச்சேரி எல்லைக்குள் பஸ்வர தடை செய்யப்பட்டதால் கடலுாரில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக சென்னைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று மாலை வரையில் சுற்றுபுற மாவட்ட பகுதிகள் மற்றும் கடலுார் மாவட்ட கிராம பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் வழங்கம்போல் இயக்கப்பட்டன.

பொதுமக்கள் பாதிக்காத வகையில் பஸ்கள் இயக்குவதற்காக, மாவட்டத்தில் உள்ள கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி உள்ளிட்ட பஸ் நிலைய டெப்போக்களில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X