பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை லாரி சிறைபிடிப்பு: பொதுமக்கள் ஆவேசம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருப்பூர்:பல பகுதிகளிலிருந்தும் குப்பை மற்றும் கழிவுகளைக் கொட்டி தங்கள் பகுதியை அசுத்தம் செய்வதாக, குப்பை லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாநகராட்சி 24வது வார்டு அரண் மனைப்புதுார் மற்றும் குறிஞ்சி நகரில், பிரதான வீதியின் கடைசி பகுதியில் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது. தினசரி மார்க்கெட் மற்றும் சுற்றுப்பகுதி கடைகளில் சேகரமாகும் குப்பை மற்றும் கழிவுகள் குப்பை வாகனங்கள் மூலம் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது.குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் கொட்டிக் குவிக்கப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் நீண்ட நாள் துர்நாற்றத்துடனும், ரோடுகளில் பரவியும் கிடக்கிறது. நேற்று காலை அப்பகுதிக்கு குப்பை கழி வுகளை கொண்டு வந்து கொட்ட ஒரு வாகனம் வந்தது. இதைக்கண்ட அப்பகுதியினர் திரண்டு வந்து அந்த வாகனத்தைச் சிறைப்பிடித்தனர்.அப்பகுதியில் குப்பையைக் கொட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த சுகாதாரப் பிரிவினர், போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தினர். அதன்பின், குப்பைத் தொட்டிகளை போக்குவரத்துக்கு இடையூறாக இன்றி ஓரமாக இடமாற்றி வைக்கப்பட்டது.தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகள் உடனடியாக அகற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வாகனத்தை பொதுமக்கள் விடுவித்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X