பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கட்டுப்பாடு கோர்ட்டில் பரிசோதனை

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பூர் கோர்ட் வளாகத்துக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு அழைத்து வரப்பட்டோர் நுழைவாயிலேயே நிறுத்தப்பட்டனர்.திருப்பர் லட்சுமி நகரில் மாவட்ட கோர்ட் வளாகமும், குமரன் ரோட்டில் சப் கோர்ட் வளாகமும் உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கோர்ட்களில் நுழைய ஊழியர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோர்ட் வளாகத்தின் மெயின் கதவு மூடப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியில், நுழைவாயிலிலேயே உள்ளே வருவோர் தடுத்து நிறுத்தப்பட்டு, காய்ச்சல் கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. அதன் பின், அவசியமான பணிக்கு வந்தோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.கோவை மத்திய சிறையிலிருந்து வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள், மெயின் கேட்டிலேயே நிறுத்தப்பட்டனர். வழக்கு விவரம் உரிய கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட பின், வழக்கு வாய்தா தேதியை அறிவித்து அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.கோர்ட் ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தபடி பணியாற்றினர். முக்கிய வழக்குகளுக்கு மட்டுமே வக்கீல்கள், வழக்குதாரர்கள் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X