பொது செய்தி

தமிழ்நாடு

கண்காணிப்பு வளையத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

அவிநாசி:வெளிநாடு சென்று திரும்பிய இருவர், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், பேரூராட்சி நிர்வாகத்தின், கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். அவிநாசி காமராஜர் வீதி மற்றும் அவிநாசிலிங்கம்பாளையம் ஆகிய பகுதியில் இருந்து, லண்டன் மற்றும் சிங்கப்பூர் சென்று திரும்பிய இருவர் குறித்த தகவல், பொதுமக்கள் மூலம் அவிநாசி பேரூராட்சிக்கு தெரியவந்தது.இதனால், பேரூராட்சி நிர்வாகத்தினர், அவர்களது வீடுகளுக்கு சென்று, அவர்களின் உடல்நிலையை கண்காணித்தனர். 'வைரஸ் தொற்று எதுவுமில்லை' என்ற போதிலும், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு, பேரூராட்சி நிர்வாகத்தினர் அவர்களுக்கு அறி வுறுத்தினர்.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு சென்று திரும்பியவர் தங்களது விவரங்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அவர்களை கண்காணிப்பது எளிதாக இருக்கும். பொதுமக்கள் தங்கள் வீட்டருகே வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு சென்று திரும்பியோர் யாராவது இருப்பின், அவர்கள் குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X