பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் ஸ்டிக்கர்

Added : மார் 24, 2020
Share
Advertisement
 தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் ஸ்டிக்கர்

கடலுார்: வெளிநாடுகளில் இருந்து கடலுார் மாவட்டத்திற்கு வந்தவர்களை கண்டறிந்து அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என குறிப்பிட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

'கொரோனா' பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த இன்று மாலை முதல், ஏப்., 1ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டுமெனவும், அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என குறிப்பிட்டு ஸ்டிக்கர் ஒட்டவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து கடலுார் மாவட்டத்திற்கு வந்த 100க்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்பட்டு, அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இப்பணியில் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X