120 கோடி பேர் வீடுகளில் முடக்கம்: 15 ஆயிரத்தை தாண்டியது பலி

Added : மார் 24, 2020
Share
Advertisement
 120 கோடி பேர் வீடுகளில் முடக்கம்:   15 ஆயிரத்தை தாண்டியது பலி

பாரிஸ்:ஆட்கொல்லி நோயான கொரோனாவின் பாதிப்புக்கு அஞ்சி, இதுவரை இல்லாத வகையில், 120 கோடிக்கும் அதிகமானோர், வீடுகளில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகளவில், 192க்கும் மேற்பட்ட நாடுகளில், கொரானோ வைரஸ் பரவியுள்ளது. பலியானோர் எண்ணிக்கை, 15ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலியில், அதிகபட்சமாக, 5,500க்கும் மேற்பட்டோர் பலியாகிஉள்ளனர். இத்தாலி அரசும், மக்களும், கொரோனாவின் கொடூரத்தை குறைத்து மதிப்பிட்டு, போதுமான முன்னெச்சரிக்கை நடைவடிக்கைகளை எடுக்கத் தவறியதுதான், உயிர் பலி அதிகரிக்க காரணம் என, கூறப்படுகிறது. இதையடுத்து, இத்தாலி, பிரான்ஸ், அர்ஜென்டினா உள்ளிட்ட சில நாடுகள், கட்டாய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளன. ஜெர்மனி, பொது இடங்களில் மக்கள் கூட தடை விதித்துள்ளது. ஸ்பெயின், 'ஏப்.,11 வரை அவசர நிலை நீட்டிக்கப்படும்' என தெரிவித்துள்ளது.
பிரிட்டன், ஈரான், நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள், மக்களை, 'வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்' என, அறிவுறுத்தியுள்ளன. ஹாங்காங், அதன் எல்லைகளை மூடிவிட்டது. அமெரிக்காவில், நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினர், வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஆயிரக்கணக்கான படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்ய, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஜப்பானில், ஜூலையில் துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்படும் என, தெரிகிறது. கனடா உள்ளிட்ட பல நாடுகள், வீரர்களை அனுப்ப இயலாது என, தெரிவித்துள்ளன. உலக மக்கள் தொகை, 770 கோடி. அதில், 120கோடிக்கும் அதிகமானோர், கொரோனா தாக்கத்திற்கு அஞ்சி, வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர்.
**உலகெங்கும் உள்ள நிலைநாடு - தொற்று உள்ளோர் - புதிய பாதிப்பு - பலி-குணமானோர்இத்தாலி- 59,138 - ( - ) - 5,476-7,024சீனா - 81,093 - 39 - 3,270- 72,703ஸ்பெயின் - 33,089 - 4,321 - 2,182 - 3,355ஈரான் - 23,049 - 1,411 - 1,812- 8,376பிரான்ஸ் - 16,481- 463 - 674 - 2,200அமெரிக்கா - 35,070 - 1,524 - 458 - 178பிரிட்டன் - 5,683 - ( ) - 281 - 135நெதர்லாந்து - 4,204 - ( ) - 179 - 2ஜெர்மனி - 26,220 - 1,347 - 111 - 266தென்கொரியா- 8,961- 64 - 111 - 3,166சுவிட்சர்லாந்து - 8,234 - 760 - 107 - 131பெல்ஜியம் - 3,743 - 342 - 88 - 350ஜப்பான் - 1,101 - ( ) - 41 - 235பிரேசில் - 1,619 - 73 - 25 - 2ஸ்வீடன் - 1,934 - ( ) - 25 - 16போர்ச்சுகல் - 2,060 - 460 - 23 - 14கனடா - 1,470 - ( ) -20 - 14ஆஸ்திரியா - 3,806 - 224 - 16 - 9மலேசியா - 1,518 - 212 - 14 - 159டென்மார்க் - 1,450 - 55 - 13 - 1நார்வே - 2,415 - 30 - 8 - 6இந்தியா - 433 - 37 - 8 -24ஆஸ்திரேலியா - 1,709 - 100 - 7 - 88பாகிஸ்தான் - 804 - 28 - 6 - 13அயர்லாந்து - 906 - ( ) -4 - 5சிங்கப்பூர் - 509 - 54 - 2 - 144இஸ்ரேல் - 1,238 - 167 - 1 - 37துருக்கி - 1,238 - 167 - 1 - ( )செக்., குடியரசு - 1,165 - 45 - 1 -6தாய்லாந்து - 721 - 122 - 1 - 52ரஷ்யா - 438 - 71 - 1 - 17ஆப்கன் - 40 - ( ) - 1 - 1இலங்கை - 87 - 5 - ( ) - 3

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X