'கரன்ட்'டில் கைவரிசை... கட்டப்பஞ்சாயத்து செய்த 'மீசை'

Updated : ஜூன் 22, 2021 | Added : மார் 24, 2020 | |
Advertisement
சித்ராவின் வீட்டுக்குள் இருமிக்கொண்டே வந்தாள் சித்ரா.''அக்கா... என்னாச்சு? ஏதாவது கொரோனா வைரஸ் தாக்குதலா?'' என கிண்டல் செய்தாள்.முக கவசத்தை கழற்றியவாறே, ''அட... ஏன்டி. வண்டியில வர்றப்ப 'டஸ்ட்'டால் அலர்ஜியாயிடுச்சு. தட்ஸ் ஆல்'' என்ற சித்ரா, மித்ரா கொடுத்த மோரை குடித்து கொண்டே, ''கமிஷன் ஆசையில், 'ைஹமாஸ் லைட்'டுக்கு கண்ணை மூடிட்டு நிதி ஒதுக்கிடறாங்களாம்,'' என,
 'கரன்ட்'டில் கைவரிசை... கட்டப்பஞ்சாயத்து செய்த 'மீசை'

சித்ராவின் வீட்டுக்குள் இருமிக்கொண்டே வந்தாள் சித்ரா.''அக்கா... என்னாச்சு? ஏதாவது கொரோனா வைரஸ் தாக்குதலா?'' என கிண்டல் செய்தாள்.

முக கவசத்தை கழற்றியவாறே, ''அட... ஏன்டி. வண்டியில வர்றப்ப 'டஸ்ட்'டால் அலர்ஜியாயிடுச்சு. தட்ஸ் ஆல்'' என்ற சித்ரா, மித்ரா கொடுத்த மோரை குடித்து கொண்டே, ''கமிஷன் ஆசையில், 'ைஹமாஸ் லைட்'டுக்கு கண்ணை மூடிட்டு நிதி ஒதுக்கிடறாங்களாம்,'' என, ஆரம்பித்தாள்.''ஓ... அதுதான், எல்லா வில்லேஜிலும், ைஹ-மாஸ் லைட் மாட்டியிருக்காங்களே, இதுதான் ரகசியமா?''

''கரெக்டா, சொல்லீட்டியே. எம்.பி., எம்.எல்.ஏ., நிதியில, 'ைஹ -மாஸ்' லைட்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கலாம். சென்னையில உள்ள ஒரு நிறுவனத்துக்கு தான் ஆர்டர் போகுது. ஆர்டரை காட்டினால், 'கமிஷனை' வெட்டிடறாங்களாம்,''

''அப்ப... நம்மாளுங்க, 'கரன்டிலும், கைவரிசையை காட்டறாங்க'ன்னு சொல்லுங்க,'' என்ற மித்ரா, ''வீட்டுமனை வரன்முறை விவகாரம் முடிஞ்சுதுனு பார்த்தா, யூனியன் ஆபீசுஸ்களில், லஞ்சம் தலைவிரிச்சு ஆடிட்டு இருக்குதாம்.'' கேள்வி கேட்டாள்.

''மித்து, அது... என்ன மேட்டர்?''

''எல்.பி.ஏ., டி.டி.சி.பி.,யில், இருந்து வீட்டுமனை அங்கீகாரம் வழங்கிட்டாங்க. கிராமப்புற மக்களுக்கு விவரம் தெரியாம இருக்கறதால, மாவட்டத்துல இருக்கற, யூனியன் ஆபீசில், இஷ்டத்துக்கும், பணம் கேட்கறாங்களாம்''

''கவர்மென்ட் கணக்கில், பணம் கட்ட 'சலான்' போட்டு தர்றதுக்கே, நாலாயிரம் வரைக்கும் கறந்திடறாங்களாம். இதில், இன்னொரு கொடுமை என்னன்னா, 'நாங்களே 'பாங்கில், 'பணம் கட்டிடறோம்னு சொல்லி, கமிஷன் தொகையையும் சேர்த்து, மொத்தமாக கறந்திடறாங்களாம்,''

''கொரோனாவை விட கொடுமையா இருக்குடி,'' என்ற சித்ரா, மீண்டும் மோர் வாங்கி குடித்து விட்டு, ''இப்படி, அடிக்கடி மோர் குடிக்கிறது நல்லதாம்டி. அதேமாதிரி, தண்ணீரில், லெமனை பிழிஞ்சு, லேசா சால்ட் போட்டு குடிச்சாலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிமாகுதாம்,'' விளக்கினாள்.

''உங்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுது. ஆனா, டாக்டர்களுக்கு குறைஞ்சிடும் போலிருக்கே...''''புரியறமாதிரி சொல்லுடி மித்து,''

''அக்கா, கொரோனா தொற்று நோயாளிகளுக்கு 'ட்ரீட்மென்ட்' கொடுக்க உடுமலை, பல்லடம், தாராபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட லில், பி.பி.இ., கிட் இன்னும் தரலையாம். இதனால், டாக்டர்கள், நர்ஸ்கள், ஸ்டாப்ஸ் இப்படி எல்லாருமே, உரிய பாதுகாப்பு இன்றி வேலை செய்றாங்களாம்,''

''ஒவ்வொரு ஹாஸ்பிடலிலும், 500 'கிட்' பி.பி.இ., ஸ்டாக் வைத்திருக்க வேண்டும். ஆனால், கிட் வாங்கிட்டோம்னு, கணக்கு காட்டி, பணத்தை 'கணக்கு' பண்ணிட்டாங்கன்னு, ஒரு தகவல் உலா வருதுங்க்கா. இதனால், காலையில ஹாஸ்பிடல் வரும் டாக்டர்கள் சிலர், 'சைன்' மட்டும் பண்ணிட்டு கிளம்பி போயிடறாங்களாம்,''

''அடக்கொடுமையே... கலெக்டர் இதையெல்லாம், கண்டுக்க மாட்டாரா?,'' என்ற சித்ரா,

''உழவர் சந்தையில், டூவீலர் பார்க்கிங், சுத்தம் செய்தல், கேன்டீனுக்கு, 'டெண்டர்' குறித்து விளம்பரமே செய்யலையாம். 31ம் தேதிக்குள்ள பழைய ஆளுக்கே கொடுத்து, 'கமிஷன்' வாங்க, அதிகாரிகள் 'துண்டு' விரிச்சிட்டாங்களாம்,'' என, புதிய தகவலை சொன்னாள்.

''அக்கா... பழைய மார்க்கெட் இடிக்க வந்தப்ப நடந்த பிரச்னை தெரியுமா?''

''ம்...ஹூம்...''''பழைய பஸ் ஸ்டாண்டுக்கு ஆப்போஸிட்டில் இருக்கிற மார்க்கெட் இடத்தில், ஸ்மார்ட் சிட்டியில் புதுசா கட்ட, கடைகளை காலி பண்ண சொன்னாங்க. ஒரு வருஷமா சொல்லியும் வேலையாகலைன்னு, திடுதிப்னு, பொக்லைனோட போயி நின்னுட்டாங்க''

''தகவல் தெரிஞ்ச மாஜி மேயர், தன்னோட சகாக்களை கூட்டி வந்து, அரை நிர்வாண போராட்டம் பண்ணினார். ஆனா, இவர் மட்டும் 'அன்டர்வேர்' உடன் உட்கார்ந்திட்டாரு. இதைப்பார்த்த பலரும் முகம் சுழிச்சிட்டாங்க. கட்சியில பெரிய பொறுப்பை வெச்சிட்டு, பொறுப்பில்லா நடந்துக்கலாமா?ன்னு பலரும் கேட்கிறாங்களாம்,''

''அது கிடக்கட்டும்டி.. மார்க்கெட் பிரச்னையில இவரு ஏன் வரிஞ்சு கட்றாரு?''''அக்கா... ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? மார்க்கெட்டில் உள்ள பல கடைகள், சூரியகட்சிக்காரர்களின் பினாமிகள்தான் நடத்தறாங்க. இதுதவிர, டெய்லி கலெக்ஷன், கந்து வட்டிக்கு பணம் குடுத்திருக்காங்க. இப்ப புரிஞ்சுதா, மாஜி மேயருக்கு ஏன் கோவம் வருதுன்னு,''

''ஓ... விஷயம் இதுதானா?'' என்ற சித்ரா, ''மித்து, போனவாரம், உடுமலையில் அரிசி கடத்தல் மேட்டர் பத்தி பேசினோம், நினைவுக்கு வருதா?'' கேள்வி கேட்டாள்.

''ஆமாங்க்கா... பூளவாடியில் ரேஷன் அரிசி கடத்தல்காரனை புடுச்சும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரி போகாம விட்டதுதானே,''

''கரெக்ட் மித்து. இதனால, கடுப்பான ரெவின்யூ அதிகாரி ஒருத்தர், அவங்களை கூப்பிட்டு, ''ஏங்க இப்படி பண்றீங்க. நீங்க நடவடிக்கை எடுத்தாதான், மத்தவங்களுக்கு பயம் வரும்'னு சொன்னாங்களாம், அதுக்கு, 'சரி, பார்க்கிறேன்'னு அசால்ட்டா சொன்னங்களாம்,''

''அதிகாரிகள் சரியா இருந்தால்மட்டுமே, குற்றம் நடக்காதுங்க்கா... ஆனா, கலெக்டர் ஆபீசில் ஒரு அதிகாரியை, இன்னொருத்தர் மிரட்டி பல ஆயிரங்களை லவட்டிட்டாராம்,''''அது, யாருடி அது, என்ன விஷயம்?''

''கலெக்டர் ஆபீசில் முக்கிய துறையிலுள்ள அதிகாரியின் 'பி.ஏ.,' ஒருத்தர், பக்கத்தில இருக்கிற இன்னொரு துறையிலுள்ள ஒரு லேடி கூட, 'கான்டாக்ட்'டில் இருந்தாராம். இது தெரிஞ்ச ஒருத்தர்,ரெண்டு பேரையும் போட்டோ எடுத்து, பிளாக்மெயில்பண்ணி பல ஆயிரம் வாங்கிட்டாராம்,''

''இப்படி, அடிக்கடி நடந்ததால், இன்னொரு 'மீசை' ஆபீசரை வச்சு, கட்ட பஞ்சாயத்து பேசி, ஒரு பெருந்தொகையை கொடுத்து செட்டில் பண்ணாங்களாம்,''

''எப்படி எல்லாம் இருக்காங்கடி...இதே மாதிரி, கோழிப்பண்ணை அதிகமுள்ள ஊரில், 'டாஸ்மாக்'கில், சரக்கு கேட்டுப்போன, 'குட்டி' அதிகாரியை, தொழிலாளி ஒருத்தர் பயங்கரமா மிரட்டிட்டாராம்,''

''அட... இதென்ன வடிவேல் காமெடியாட்டம் இருக்கு''

"ஆமான்டி... நாயக்கர் பேரிலுள்ள ஒரு ஏரியாவில் 'டாஸ்மாக்' கடைக்கு, எஸ்.ஐ., ஒருத்தர் நைட் ரவுண்ட்ஸ் போயிருக்கார். அங்கிருந்த ஊழியரிடம், 'ஏன்டா, வெடிய வெடிய சரக்கு விக்கறயா? மரியாதையா, 10 ஆயிரமும், 'பாட்டிலும்' கேட்டிருக்கார்,''

''அப்புறம் என்னாச்சுங்க்கா''''ஆனா, அதுக்கு அந்த ஊழியர், ரொம்ப பேசிட்டு இருந்தீங்கன்னு, எங்காளுகளை வரச்சொல்லி போட்டு தள்ளிடுவேன்னு' சொல்ல, நம்ம எஸ்.ஐ., துண்டைக்காணோம், துணிய காணோம்,'னு ஓடிப்போயிட்டாராம்,''

''அதுக்கப்புறம், மத்த ஊழியர்கள், அவரிடம் நடந்ததை சொல்லி, 'நல்ல வேள சார், அவன் மப்புல இருக்கறப்போ போயிருந்தீங்கன்னா, கதை வேற மாதிரி போயிருக்கும்,'னு சொன்னதால், எஸ்.ஐ,.க்கு பிபி, எகிறிடுச்சாம்,''

''ஒரு வழியா ரிலாக்ஸ் ஆன, அவர், இப்போ, 15 ஆயிரம் கேட்கிறாராம்,'' என சொல்லி சிரித்தாள் மித்ரா.''இதுபோன்ற போலீசை எல்லாம், அந்த முருகன்தான் காப்பத்தணும்,''ஓ.கே., மித்து, 144 அறிவிச்சிட்டாங்க. வீட்டுக்குள்ளேயே இரு. எங்கேயும் வெளியில போகாதடி. அலர்ட்டா இருந்தா கொரோனா ஓடியே போயிடும்'' என்ற சித்ரா, 'பை.. பை...'' சொல்லி, முக கவசம், கையுறை அணிந்து வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X