பொது செய்தி

தமிழ்நாடு

தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க குவிந்த பொதுமக்கள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருப்பூர்:தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதியில் இருந்து, 50 டன் காய்கறிகள் நேற்று குவிந்தன. உழவர் சந்தையில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.சுயஊரடங்கு அறிவிப்புக்கு பின் நேற்று கூடிய தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு காலை, 9:00 மணி முதல் வேன், ஆட்டோ, லாரிகளில் அதிகளவில் காய்கறிகளை கொண்டு வந்தனர். பீர்க்கன், புடலை, முள்ளங்கி, பாகல், முருங்கை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், 50 டன் குவிந்தது. ஆறு டன் வரை வெங்காயம் வந்தது.நேற்று முன்தினம் ஒரு நாள் விடுமுறை, அடுத்தடுத்த நாட்களில் வேறு அறிவிப்பு வரலாம் என்பதால், நேற்று சந்தைக்கு அதிகளவில் காய்கறிகளை வியாபாரிகள் வாங்க வந்தனர்.அதற்கேற்ப வாடிக்கையாளர் கூட்டமும் இருந்தது. காய்கறிகளை வாங்க கடும் போட்டி, கிராக்கி நிலவியதால், மாலை, 3:00 மணி வரை விற்பனை சூடுபிடித்தது. இன்று மாலை, 6:00 மணியுடன் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதால், இன்று காய்கறிகள் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.உழவர் சந்தையில் கடும் தட்டுப்பாடுவழக்கமாக அதிகாலை 2:00 மணிக்கு துவங்கும் சந்தை, காலை 7:30 மணி வரை நடக்கும். காலை, 5:00 மணி வரை சுயஊரடங்கு அமலில் இருந்ததால், சந்தை கேட் இழுத்து மூடப்பட்டிருந்தது. 5:05க்கு கேட் திறக்கப்பட்டு விவசாயிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், காய்கறிகளை ஒழுங்குபடுத்த, பதிவேட்டில் கையொப்பமிட்டு தராசு பெற ஒரு மணி நேரமாகி விட்டது. 6:00 முதல், 8:00 மணி வரை விற்பனை மட்டுமே நடந்தது.தெற்கு உழவர் சந்தைக்கு வழக்கமாக நுாறு டன் காய்கறிகளும், 450 விவசாயிகளும், 10 ஆயிரம் வாடிக்கையாளர்களும் வருவர். சுயஊரடங்கு உத்தரவுக்கு பின் நேற்று கூடிய சந்தைக்கு, 39 டன் காய்கறி மட்டுமே வந்தது. 120 விவசாயிகள், 3,800 வாடிக்கையாளர்களே வந்திருந்தனர். வடக்கு உழவர் சந்தைக்கு, 40 டன் காய்கறிகள் வந்தது. குறைந்தளவு காய்கறி மட்டுமே வந்ததால், விலை நிர்ணயிப்பதில் குழப்பம் நிலவியது.விழிப்புணர்வு வேண்டும் உழவர் சந்தைக்கு வரும் மக்களும், பொருட்களை கொண்டு வரும் விவசாயிகளும், கொரோனா தடுப்பு நடவடிக்கை முக கவசம் அணிவதில்லை. சந்தைக்கு வரும் ஒவ்வொருவரும் முக கவசம் அணிந்து சந்தைக்கு வர வேண்டும். விவசாயிகள் அணிய சந்தை அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X