பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை இல்லை!' பள்ளிகளில், கல்வித்துறையினர் மெத்தனப்போக்கு

Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை இல்லை!' பள்ளிகளில், கல்வித்துறையினர் மெத்தனப்போக்கு

திருப்பூர்:பிளஸ் 1 வகுப்புக்கான உயிரியல், வரலாறு வணிக கணிதம் உள்ளிட்ட தேர்வுகள் மிக எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பள்ளிகளில், கொரோனா விழிப்புணர்வு எதுவும் கடைப்பிடிக்கவில்லை.கொரோனா அச்சத்தால், நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதில், பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று நடந்தது. திருப்பூரில் மட்டும், 6 ஆயிரத்து, 216 பேர் உயிரியல் தேர்வும், 321 பேர் தாவரவியல், 2 ஆயிரத்து, 11 பேர் வரலாறு, ஆயிரத்து, 669 பேர் வணிக கணிதம், 27 பேர் ஆடை தொழில்நுட்பம், 177 பேர் அலுவலக மேலாண்மை தேர்விலும் பங்கேற்றனர்.இதில், 768 பேர் ஆப்சென்ட். தனித்தேர்வகளில் விண்ணப்பித்த, 66 பேரில், 16 பேர் ஆப்சென்ட். அனைத்து தேர்வுகளும் மிக எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.மெத்தன போக்குதேர்வர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் அமர வைக்கப்பட்டனர். தேர்வறைக்குள் கிருமி நாசினி எடுத்து வரவும் மற்றும் முக கவசம் அணியவும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், கொரோனா முன்னெச்சரிக்கைக்காக மாணவர்களுக்கு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தேர்வு மையங்களில் மேற்கொள்ள வேண்டுமென அரசு அறிவித்திருந்தது.குறிப்பாக, தேர்வு துவங்கும் முன் தேர்வு மையங்கள், தேர்வறை, டேபிள், நாற்காலி, இருக்கைகள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். தேர்வெழுதுவதற்கு முன்பாக, கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே மாணவர்களை அனுமதிக்க வேண்டும். மாணவர்களுக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் நிதியில் இருந்து முக கவசம் வழங்க கல்வித்துறை அறிவுறுத்தியது.இருப்பினும் பெரும்பாலான பள்ளிகளில் இந்நடைமுறை முறையாக பின்பற்றவில்லை. மாணவ, மாணவியர் விழிப்புணர்வின்றி அலட்சியமாகவே காணப்பட்டனர்.இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷிடம் கேட்டதற்கு, ''பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நடக்கும் வேதியியல், கணக்கு பதிவியல் பாடங்களோடு முடிவடைகிறது. மாணவர்கள் தகுந்த பாதுகாப்போடு தேர்வில் பங்கேற்க தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.சளி, இருமல் இருந்தால் முககவசம் வழங்க பள்ளிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளஸ் 1 தேர்வு, 26ம் தேதியுடன் நிறைவடைவதால் பள்ளி மாணவர்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மார்-202015:16:03 IST Report Abuse
Ram Pollachi ஈர், பேன்களை விடவா இந்த கொரோனா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X