சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழுதான பள்ளி கட்டடம் இடிப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement
 பழுதான பள்ளி கட்டடம் இடிப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பழுதடைந்த பள்ளி கட்டடம் இடித்து அகற்றும் பணி நடந்தது.

விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் பின்புறம் பழுதடைந்த கட்டடம் இருந்தது. இங்கு, விடுமுறை தினங்களில் சமூக விரோதிகள் தங்கள் கூடாரமாக பயன்படுத்தி வந்தனர். மாணவர்கள் பழுதடைந்த கட்டடத்தினால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். பள்ளிக்கு இலவச சைக்கிள் வழங்க வந்திருந்த தொகுதி எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வனிடம், இதுகுறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.மாணவர்களின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ., உடனடியாக கட்டடத்தை இடித்து அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசுவதாக உறுதியளித்துச் சென்றார்க.

இந்நிலையில் கொரோனோ வைரஸ் காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பின்றி பழுதடைந்த கட்டடங்களை வங்கித் தலைவர் பூர்ணராவ், இயக்குனர்கள் பலராமன், கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் ஜே.சி.பி., மூலம் கட்டடங்கள் இடித்து அகற்றும் பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X