விற்பனை செய்ப்பட்ட மீனில் புழுக்கள் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விற்பனை செய்ப்பட்ட மீனில் புழுக்கள் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார்

Added : மார் 24, 2020
Share

செஞ்சி: செஞ்சியில் விற்பனை செய்த மீனில் புழுக்கள் நெளிந்ததால் பொது மக்கள் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.

கொரோனா நோய் பீதியால் கறிக்கோழி விற்பனை சரிந்துள்ளது. இதற்கு மாற்றாக பொதுமக்கள் மீன் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.செஞ்சியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் பொன்பத்தி கூட்ரோடு அருகே கடந்த 21ம் தேதி நேற்று முன்தினம் மதியம் வெளியூரிலிருந்து வந்த நபர் ஒருவர் சாலையோரம் மீன்கடை அமைத்திருந்தார்.இங்கு மீன் வாங்கி வந்த செஞ்சி பீரங்கி மேட்டைச் சேர்ந்த ஒருவர், மீனை சுத்தம் செய்ய போது அதற்குள் புழு நெளிந்துள்ளது. உடனடியாக அந்த மீனை வாங்கிய நபர் உடனே கொண்டு சென்றுள்ளார். கடைக்காரர் வேறு ரக மீனை கொடுத்துள்ளார்.இதை அருகில் இருந்து கவனித்த பொதுமக்கள் சிலர் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலர் பத்மநாபனுக்கு தகவல் தெரிவித்தனர்.உணவுப் பாதுகாப்பு அலுவலர் வருவதற்குள் மீன்கடை நடத்தி வந்த வெளியூர் நபர் தனது கடையை காலி செய்து கொண்டு வேகமாக சென்று விட்டார்.இதன் பிறகு வந்த உணவுப் பாதுகாப்பு அலுவலர் பத்மநாபன், அதே பகுதியில் இயங்கி வரும் மற்ற மீன் கடைகளுக்கு சுகாதாரமான மீன் விற்பனை செய்ய வேண்டும் என நோட்டீஸ் கொடுத்து, எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X