பொது செய்தி

தமிழ்நாடு

கடம்பத்துாரில், 'கொரோனா' விழிப்புணர்வு தீவிரம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கடம்பத்துார் : கடம்பத்துார் ஊராட்சியில், 'கொரோனா' வைரஸ் தடுப்பு முறை விழிப்புணர்வு முகாம் தீவிரமாக நடந்து வருகிறது.

திருவள்ளூர் அடுத்த, கடம்பத்துார் ஊராட்சியில், கொரோனா வைரஸ் தடுப்பு முறை குறித்த விழிப்புணர்வு முகாம், தீவிரமாக நடந்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, கடம்பத்துார் ரயில் நிலையம் அருகே, கொரோனா வைரஸ் தடுப்பு முறை விழிப்புணர்வு நடந்து வருகிறது. முகாமில், கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர், லதா, சுகாதார ஆய்வாளர், சங்கர் தலைமையில், சுகாதார பணியாளர்கள் பங்கேற்று, சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு கைகளை கழுவும் முறை குறித்து விரிவாக எடுத்துக் கூறி வருகின்றனர்.

மேலும், பொதுமக்களின் கைகளிலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கைகளை சுத்தம் செய்ய வலியுறுத்துகின்றனர்.அதேபோல், வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு வந்த பின், கைகளை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது குறித்து சுகாதார பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X