பொது செய்தி

தமிழ்நாடு

மாஸ்க் தயாரிக்கும் பணியில் மகளிர் சுய உதவி குழுக்கள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

செஞ்சி: கீழ்பாப்பம்பாடி கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கொரோனா நோய் தடுப்பிற்காக மாஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா நோய் பாதுகாப்பிற்கான சானிட்டரி லிக்யூட், மாஸ்க், கையுறை ஆகியவற்றிற்கு திடீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சானிட்டரி லிக்யூட், மாஸ்க் ஆகியவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கொண்டு தயாரிக்கும் பணியை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.வல்லம் ஒன்றியம் கீழ்பாப்பம்பாடி கிராமத்தில் பாரதியார் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மாஸ்க் தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு மாஸ்க் தயாரிக்கும் பணியில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.இப்பணிகளை விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் மோகன், வல்லம் பி.டி.ஓ.,க்கள் குலோத்துங்கன், புருஷோத்தமன் பார்வையிட்டனர். சிறந்த முறையில் மாஸ்க் தயாரித்த மகளிர் குழுவினரை அதிகாரிகள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X