ம.பி., முதல்வராக பா.ஜ., வை சேர்ந்த சிவராஜ்சிங் சவுகான் பதவியேற்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement
 ம.பி., முதல்வராக பா.ஜ., வை சேர்ந்த சிவராஜ்சிங் சவுகான் பதவியேற்பு

போபால்:மத்திய பிரதேச முதல்வரராக, பா.ஜ.,வை சேர்ந்த, சிவராஜ் சிங் சவுகான், 61, நேற்று பதவியேற்றார். அவருக்கு, கவர்னர், லால்ஜி டாண்டன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மத்திய பிரதேச சட்டசபைக்கு, 2018 டிசம்பரில் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள, 230 இடங்களில், 113 இடங்களில் காங்கிரசும், 107 இடங்களில் பா.ஜ.,வும் வெற்றி பெற்றன.யாருக்கும் பெரும்பான்மையில்லாத நிலையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல்வராக கமல்நாத் பதவியேற்றார்.

இம்மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்.,பொதுச் செயலராக இருந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியாவை ஆதரிக்கும், 22 எம்.எல்.ஏ.,க்கள், 15 நாட்களுக்கு முன், கர்நாடக மாநிலம் பெங்களுருக்கு சென்று தங்கினர். இதன்பின், சிந்தியா, பா.ஜ.,வில் சேர்ந்தார், அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 22 பேரும், தங்கள் பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை சபாநாயகர், பிரஜாபதிக்கு அனுப்பினர்.இதில், ஆறு அமைச்சர்களின் ராஜினாமாக்களை மட்டும், சபாநாயகர் முதலில் ஏற்றுக் கொண்டார்.பெரும்பான்மையை நிரூபிக்க கமல்நாத்துக்கு உத்தரவிட கோரி, பா.ஜ., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 20ம் தேதி, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, சபாநாயகர் பிரஜாபதிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், 16 பேரின் ராஜினாமாவையும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.இதனால், நம்பிக்கை ஓட்டெடுப்புக்காக, சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூடுவதற்கு முன்பே, முதல்வர் பதவியை, கமல்நாத் ராஜினாமா செய்தார். புதிய அரசு அமையும் வரை, காபந்து முதல்வராக நீடிக்குமாறு, கவர்னர், டாண்டன், கமல்நாத்தை கேட்டுக் கொண்டார்.இதன் பின், 21ம் தேதி, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த, 22 பேரும், பா.ஜ.,வில் இணைந்தனர்.போபாலில், பா.,ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நேற்று நடந்தது. ' கூட்டத்தில், சட்டசபை பா.ஜ., தலைவராக, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள், முக கவசம் அணிந்து, ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். இதையடுத்து, கவர்னர் மாளிகைக்கு சென்ற சிவராஜ் சிங் சவுகான், கவர்னர், லால்ஜி டாண்டனை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதை ஏற்று ஆட்சியமைக்க, சவுகானுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.இதைத் தொடர்ந்து, கவர்னர் மாளிகையில், நேற்று இரவு, 9:00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், மத்திய பிரதேசத்தின், 17வது முதல்வராக, சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றார். அவருக்கு கவர்னர், டாண்டன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.மத்திய பிரதேச முதல்வராக, சிவராஜ் சிங் சவுகான், 2005 - 2018ம் ஆண்டு வரை, 13 ஆண்டுகள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X