பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் குறித்து தகவல் கொடுங்கள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருத்தணி : வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் குறித்து, வருவாய் துறை மற்றும் சுகாதார துறை அலுவலர்களுக்கு, பொதுமக்கள் தகவல் கொடுக்க வேண்டும் என, வருவாய் கோட்டாட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் வந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என, சுகாதார துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணம் அமுதா கூறியதாவது:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில், ஊராட்சி வாரியாக வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் நியமித்து, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

வெளிநாட்டில் இருந்து தன் சொந்த கிராமத்திற்கு வந்தவர்கள் இருப்பின், அவர்களின் விவரம் உடனடியாக வருவாய் துறை அலுவலர்கள் அல்லது பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தினேஷ், மொபைல்போனுக்கு 96002 97437 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட நிர்வாகம் அறிவித்த கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X