வெளிநாடு சென்று திரும்பியவர் விவரம்: மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடு சென்று திரும்பியவர் விவரம்: மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் பதிவு

Added : மார் 24, 2020
Share

திருப்பூர்:வெளிநாடு சென்று திரும்பியவர்கள், மாவட்ட கட்டுப்பாட்டு அறையில், தங்கள் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணி, மாநிலம் முழுவதும் போர்க் கால அடிப்படையில் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படாத சூழல் தொடர்கிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில், அச்சம் குறையவே இல்லை.தமிழக அரசு, மாநிலம் முழுவதும், 144 தடையுத்தரவு அமலாகுமென அறிவித்துள்ளது. இதன்மூலமாக, பொதுமக்கள், அவரவர் வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தொழில் நிமித்தமாக, அடிக்கடி வெளிநாடுகள் சென்று வருகின்றனர்.அந்த வகையில், கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாடு சென்று திரும்பியவர்கள், விவரத்தை சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, வெளிநாடு சென்று வந்தவர்கள், தாங்களாக முன்வந்து, விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டுமென, கலெக்டர் அறிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அறை, கலெக்டர் அலுவலகத்தில் இயங்குகிறது. வருவாய்த்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் இணைந்து, கட்டுப்பாட்டு அறையை இயக்குகின்றனர். 0421 -1077, 0421 2971199 என்ற எண்களில் மக்கள் தொடர்புகொண்டு வருகின்றனர்.கலெக்டர் அறிவித்துள்ளபடி, கடந்த ஒரு மாதத்திற்குள், வெளிநாடு சென்று வந்தவர்கள், தாங்களாக முன்வந்து, தங்களது விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'விவரம் அளித்த நபர்கள், மருத்துவ குழுவின் கண்காணிப்பில் வைக்கப்படுவர். அருகில் உள்ள அரசு மருத்துவமனையில், தினமும், உடல்நிலை பரிசோதிக்கப்படும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X