நிலக்கடலை வர்த்தகத்தில் வீழ்ச்சி ஏலத்தை ரத்து செய்த அதிகாரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை வர்த்தகத்தில் வீழ்ச்சி ஏலத்தை ரத்து செய்த அதிகாரிகள்

Added : மார் 24, 2020
Share

அவிநாசி:உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் 'கொரோனா' வைரஸ், அனைத்து தரப்பு வியாபாரத்தையும் முடக்கி உள்ளது. அதன் பாதிப்பை, திருப்பூர் மாவட்டம், அவிநாசி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த நிலக்கடலை ஏலத்தில் உணரமுடிந்தது.அவிநாசி, ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் நிலக்கடலை, இந்த ஏல மையத்தில் விற்கப்படுகிறது.தற்போது, விளைச்சல் குறைவு என்ற போதிலும், வாரந்தோறும், 100 முதல்,150 மூட்டை நிலக்கடலை விற்கப்பட்டது; 3 முதல் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்து வந்தது. 10க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று, கொள்முதல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.ஆனால், சந்தையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால், கடந்த வார ஏலத்தில், இதுவரை இல்லாத வீழ்ச்சி ஏற்பட்டது. வெறும், மூன்று வியா பாரிகள் மட்டுமே பங்கேற்று, 60 மூட்டை நிலக்கடலையை ஏலத்தில் எடுத்தனர்.ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்தில், ஒரு சில விவசாயிகள் வந்திருந்தாலும், வியாபாரிகள் யாரும் நிலக்கடலை கொள்முதல் செய்ய வராததால், ஏலம் நடக்கவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X