முட்டை விலை சரிவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முட்டை விலை சரிவு

Added : மார் 24, 2020
Share
திண்டிவனம்: கொரோனா பீதியால், திண்டிவனத்தில் 10 முட்டை 20க்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி மற்றும் பறவை காய்ச்சல் பீதியால் நாமக்கல்லிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் முட்டை விலை, வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து விட்டது.இதன் காரணமாக, திண்டிவனம் மார்க்கெட்டில், கடந்த ஒரு மாதத்திற்கு

திண்டிவனம்: கொரோனா பீதியால், திண்டிவனத்தில் 10 முட்டை 20க்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி மற்றும் பறவை காய்ச்சல் பீதியால் நாமக்கல்லிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் முட்டை விலை, வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து விட்டது.இதன் காரணமாக, திண்டிவனம் மார்க்கெட்டில், கடந்த ஒரு மாதத்திற்கு 4.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு முட்டையின் விலை, தற்போது திடீரென ஒரு முட்டை 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 30 முட்டைகள் கொண்ட ஒரு ரேக், தற்போது 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கேட்டபோது, கொரோனா வைரஸ் காரணமாக, நாமக்கல்லில் முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் தேங்கியுள்ள முட்டைகள் அனைத்து பகுதிகளுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகின்றது.இதனால் முட்டை விலை 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலைமை நீடித்தால் முட்டை விலை இன்னும் குறைந்த விலைக்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுவிடும் என்று தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X