பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணம் வழங்க கோரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருப்பூர்:தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் நிவாரணம் வழங்க வேண்டுமென, ஐ.என்.டி.யு.சி., கோரிக்கை விடுத்துள்ளது.திருப்பூர் மாவட்ட ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க செயற்குழு நேற்று கூடியது. தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். கொரோனா நோய் தடுப்புக்காக, நிறுவனங்கள் மூடப்படுவதாக, அறிவித்துள்ளதால், தொழிலாளர் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்; கட்டுமானம் மற்றும் அமைப்பு சாராத தொழிலாளர்கள், 1.50 லட்சம் பேர், மாவட்டத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு, நலவாரியம் மூலம், மாதம், 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X